ஐசிசி தேர்வு செய்த 2022ம் ஆண்டின் சிறந்த டி20 லெவன்..! 3 இந்திய வீரர்களுக்கு இடம்
2022ம் ஆண்டின் சிறந்த டி20 லெவனை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும், அதற்கு முந்தைய ஆண்டில் டி20, டெஸ்ட், ஒருநாள் ஆகிய 3 ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்ட ஆடும் லெவனை ஐசிசி அறிவிப்பது வழக்கம். அந்தவகையில், 2022ம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய 11 பேர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது ஐசிசி.
2022ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடந்தது. இந்த உலக கோப்பையில் சிறப்பாக ஆடியதுடன், கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தி இங்கிலாந்துக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த ஜோஸ் பட்லரை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ள ஐசிசி, அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளது. மற்றொரு தொடக்க வீரராக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
சச்சினா கோலியா..? கவாஜாவின் கேள்விக்கு பூசி மொழுகாமல் கறாரா பதிலளித்த கம்மின்ஸ்
3ம் வரிசை வீரராக விராட் கோலியை தாண்டி ஒருவரை யாராலும் யோசிக்க முடியாது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் தான் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசியிருந்தார் கோலி. எனவே 3ம் வரிசை வீரராக கோலியையும், 4ம் வரிசை வீரராக கடந்த ஆண்டில் அதிக ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளது ஐசிசி.
5ம் வரிசை வீரராக நியூசிலாந்தின் க்ளென் ஃபிலிப்ஸையும், அதன்பின்னர் ஃபினிஷர்களாக ஆல்ரவுண்டர்கள் சிக்கந்தர் ராஸா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளது ஐசிசி. மற்றொரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக சாம் கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் சாம் கரனை புறக்கணிக்க வாய்ப்பேயில்லை என்பதால் அவர் அணியில் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்தவர் சாம் கரன்.
மற்ற 2 ஃபாஸ்ட் பவுலர்களாக ஹாரிஸ் ராஃப் மற்றும் ஜோஷுவா லிட்டில் ஆகிய இருவரையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஸ்பின்னராக இலங்கை ரிஸ்ட் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்காவை தேர்வு செய்துள்ளது.
என் கெரியரில் நான் எதிர்கொண்டதில் மிகக்கடினமான பவுலர் அவர் தான்..! புஜாரா ஓபன் டாக்
ஐசிசி தேர்வு செய்த 2022ம் ஆண்டின் சிறந்த டி20 லெவன்:
ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), முகமது ரிஸ்வான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், க்ளென் ஃபிலிப்ஸ், சிக்கந்தர் ராஸா, ஹர்திக் பாண்டியா, சாம் கரன், வனிந்து ஹசரங்கா, ஹாரிஸ் ராஃப், ஜோஷ் லிட்டில்.
ஐசிசி தேர்வு செய்த 2022ம் ஆண்டின் டி20 லெவனில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.