முதல் IPL vs முதல் WPL - இறுதிப் போட்டியில் அப்போ தல தோனி; இப்போ ஹர்மன்ப்ரீத் கவுர்: அப்போ வெற்றி யாருக்கு?

முதல் முறையாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
 

Who Will win WPL First Season? Harmanpreet Kaur Mumbai Indians Team Entered into WPL Final

கடந்த 4ஆம் தேதி தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நாளையுடன் (26 ஆம் தேதி)முடிவடைகிறது. பரபரப்பாக சென்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், யுபி வாரியர்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் அதிர வைத்த இசி வாங்: முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வரலாற்று சாதனை!

யுபி வாரியர்ஸ் அணி:

அலைஸா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷ்வேதா செராவத், சிம்ரன் ஷேக், டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், கிரன் நவ்கிரே, தீப்தி ஷர்மா, சோஃபி எக்லிஸ்டோன், அஞ்சலி சர்வானி, பார்ஷவி சோப்ரா, யஷஸ்ரி.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), மெலி கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.

ஐபிஎல் 2023: ஜிஎஸ்டி இல்லாமல் மட்டும் ரூ.20,000 வரையிலும் விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்!

அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் பிரண்ட் 38 பந்துகளில் 2 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 72 ரன்கள் குவித்து கடைசி அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 3ம் வரிசையில் இறங்கிய கிரன் நவ்கிரே மட்டுமே நன்றாக ஆடி 27 பந்தில் 43 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொதப்ப, அந்த அணி வெறும் ரன்கள் மட்டுமே அடித்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா? சச்சின், லியோனல் மெஸ்ஸியை உதாரணமாக சொன்ன ரவி சாஸ்திரி!

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு சென்றது. நாளை நடக்க உள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியுடன், மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது. இதன் மூலமாக ஒரு இந்தியன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்  தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

இதற்கு முன்னதாக ஆண்கள் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷைன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் சீசனில் வெற்றி வாகை சூடியது. அதே போன்று எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் 2ஆவது இடம் பிடித்தது.

இது என்ன கேகேஆருக்கு வந்த சோதனை: நிதிஷ் ராணாவுக்கு காயம்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? விலகுவாரா?

தற்போது இதே போன்று தான் மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. ஆனால், ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலியா கேப்டன் தலைமையிலான அணி வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios