Asianet News TamilAsianet News Tamil

இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா? சச்சின், லியோனல் மெஸ்ஸியை உதாரணமாக சொன்ன ரவி சாஸ்திரி!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோரை உதாரணமாக கொண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு அவர்களுக்கூ நீண்ட காலம் எடுத்துக் கொண்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 

Will India win the World Cup? Ravi Shastri Gives 2 Best Examples for India may win world cup 2023?
Author
First Published Mar 24, 2023, 2:54 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 50 ஓவர் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்த தொடரை இந்தியா நடத்துகிறது. இந்த உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றுமா? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இதற்காக அவர் இருவிதமான உதாரணங்களையும் கூறியுள்ளார். முதலாவதாக சச்சின் டெண்டுல்கரை உதாரணமாக கூறினார்.

இது என்ன கேகேஆருக்கு வந்த சோதனை: நிதிஷ் ராணாவுக்கு காயம்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? விலகுவாரா?

சச்சின் டெண்டுல்கர் 6 உலகக் கோப்பையில் விளாடியிருக்கிறார். அதில் ஒரு ஐசிசி டிராபியை வென்றுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. இது தான் சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக் கோப்பை. இந்த உலகக் கோப்பைக்கு பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதே போன்று 2ஆவது உதாரணமாக லியோனல் மெஸ்ஸியை கூறியுள்ளார். அர்ஜெண்டினா நாட்டின் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜெண்டினா அணிக்காக வென்றார். கடந்த ஆண்டு நடந்த ஃபிபா உலகக் கோப்பையை வென்றார். இதற்கு முன்னதாக கடந்த 1978 ஆம் ஆண்டும், 1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய ஆட்டம் இன்னும் வரவேயில்லை; கண்டிப்பாக ஐபிஎல் 2023ல் நடக்கும் என்று நம்புகிறேன்: விராட் கோலி!

இந்த இரு உதாரணங்களை சுட்டிக் காட்டி காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக, அவர் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறுகிறாரா? இல்லை இன்னும் காலம் ஆகும் என்று கூறுகிறாரா எனபது தெரியவில்லை. 12 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் இந்த உலகக் கோப்பையை ராகுல் டிராவிட் பயிற்சியில் ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் வரும் இந்திய 10 ஆண்டு வறட்சியை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios