இது என்ன கேகேஆருக்கு வந்த சோதனை: நிதிஷ் ராணாவுக்கு காயம்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? விலகுவாரா?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் நிதிஷ் ராணாவுக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விளையாடுவது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் திருவிழாவானது இந்த ஆண்டு வரும் 31 ஆம் தேதி பிரம்மானடமாக தொடங்குகிறது. இதற்காக அந்தந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அந்தந்த அணியில் இடம் பெற்று தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். வரும் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே சில வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இடம் பெறவில்லை. அதில் ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரை சொல்லலாம். இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தொடங்குவதற்கு இன்னும் 7 நாட்கள் ஆன நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒவ்வொரு வீரராக காயம் காரணமாக விளங்கியுள்ளனர். அதில், அணியின் கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் காயம் காரணமாக முதலாவதாக விலகியுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஓபனராக பெற்ற வெற்றிக்கு டேட்டா அனாலிட்டிக்ஸ் தான் காரணம் - ரோகித் சர்மா பெருமிதம்!
இவரைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான லாக்கி ஃபெர்குசனும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்பது என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஃபின் ஆலன், க்ளென் ஃபிலிப்ஸ் ஆகியோருடன் சேர்ந்து ஃபெர்குசனும் வரும் 26ம் தேதி இந்தியாவிற்கு வருவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக ஃபெர்குசன் இந்தியாவிற்கு வரவில்லை. 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரும் கேகேஆர் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவருமான லாக்கி ஃபெர்குசனும் ஐபிஎல்லில் ஆடாதது கேகேஆர் அணி பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இவர்களது வரிசையில் மற்றொரு வீரரும் இணைந்துள்ளார். ஆம், கேகேஆர் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான நிதிஷ் ராணாவுக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விளையாடுவது சந்தேகம் தான். இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நேற்றிரவு த்ரோ டவுன்களை எதிர்கொள்ளும் போது நிதிஷ் ராணாவின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், நிதிஷ் ராணா இது பெரிதாக இல்லை என்று கூறியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றது. அதன்பிறகு அந்த அணி கோப்பை வெல்லவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் மூலமாக ஷ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால், இந்த சீசனில் அவர் இடம் பெறாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், நாராயண் ஜெகதீசன், வைபவ் அரோரா, சுயாஷ் ஷர்மா, டேவிட் வீஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, மந்தீப் சிங், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன்.