MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • India vs England Semi Final: மிஸ்டரி ஸ்பின்னர் நீக்கம்.. அனுபவ வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன்!

India vs England Semi Final: மிஸ்டரி ஸ்பின்னர் நீக்கம்.. அனுபவ வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன்!

டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 04 2026, 06:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியா, இங்கிலாந்து அரையிறுதி போட்டி
Image Credit : Getty

இந்தியா, இங்கிலாந்து அரையிறுதி போட்டி

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸை பந்தாடிய இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் வரும் 5ம் தேதி மோதுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வருண் சக்கரவர்த்தி பந்து சிறப்பானதாக இல்லை
Image Credit : AFP

வருண் சக்கரவர்த்தி பந்து சிறப்பானதாக இல்லை

இந்த தொடரில் இதுவரை வருண் சக்கரவர்த்தி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சற்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். மேலும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியிலும் அவரது பந்துவீச்சு சிறப்பானதாக இல்லை. மேலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 'மிஸ்டரி ஸ்பின்னை' விட வழக்கமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள சற்று திணறுவார்கள் என்பதால் குல்தீப் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

35
வருணுக்கு பதிலாக குல்தீப்
Image Credit : AFP

வருணுக்கு பதிலாக குல்தீப்

மேலும் மும்பை வான்கேடே மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்றாலும் கடந்த சில போட்டிகளில் பந்து கொஞ்சம் நின்று நன்றாகத் திரும்புகிறது. இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக குல்தீப் யாதவின் 'ரிஸ்ட் ஸ்பின்' அதிக பலன் தந்துள்ளது. இதன் காரணமாக வருணுக்கு பதிலாக குல்தீப் இடம்பெறலாம். இது தொடர்பாக கேப்டன் சூர்யகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டப்போது, 'அக்சர் படேலுடன் இணைந்து குல்தீப் அல்லது வருண் இருவரில் யாரை இறக்குவது என்பது ஒரு இனிமையான தலைவலி' என்று கூறியிருந்தார்.

45
அபிஷேக் சர்மாவும் நீக்கமா?
Image Credit : ANI

அபிஷேக் சர்மாவும் நீக்கமா?

ஒருவேளை போட்டிக்கு முன்னதாக பிட்ச் முழுமையாக ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் என தெரியவந்தால் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் என 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி விளையாட வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால் அர்ஷ்தீப் சிங் நீக்கப்படுவார். 

இது தவிர இந்திய அணியின் தொடக்க அதிரடி வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்பி வருகிறார். 3 போட்டிகளில் டக் அவுட் ஆன அவர் இந்த தொடரில் இதுவரை மொத்தமாக 80 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால் அவர் நீக்கப்படுவரா? இல்லை பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

55
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : ANI

இந்திய அணி பிளேயிங் லெவன்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா அல்லது ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Recommended image2
Virat Kohli: 15,000 ரன்களை தொட்ட ‘கிங்’ கோலி.. மிரட்டல் சாதனை படைத்த ரன் மெஷின்..!
Recommended image3
Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!
Related Stories
Recommended image1
இந்தியா vs இங்கிலாந்து.. டி20 உலகக்கோப்பையில் கெத்து காட்டியது யார்? முழு ரிப்போர்ட்!
Recommended image2
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி.. அபிஷேக் சர்மா நீக்கம்.. அதிரடி வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved