அஜித் பிடிக்குமா? விஜய் பிடிக்குமா? விராட் கோலியா? ஸ்மித்தா? டக்கு டக்குன்னு பதில் அளித்த தினேஷ் கார்த்திக்!
மஹிந்திரா நிறுவனம் சார்பாக நடந்த தி ஸ்டேஜ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
மஹிந்திரா ஹாலிடேஸ் மற்றும் ரெசார்ட்ஸ் இந்தியா லிமிடேட் நிறுவனத்தின் முதன்மையான பிராண்டான கிளப் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் உடன் உரையாடல் ஒன்றை நடத்தியது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தி ஸ்டேஜ் -ன் கீழ் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான விருந்தினர்கள் மற்றும் கிளப் மஹிந்திரா உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை, அவர் கடந்து வந்த பாதையின் அனுபவங்கள், உடற்பயிற்சி, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை பற்றி கேட்பதற்கு ரசிகர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே ரேபிட் பையர் என்று சொல்லப்படும் டக் டக்குன்னு பதில் சொல்வது தான். சமீபத்தில் அவர் பார்த்த 2 வெப்சீரிஸ் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி, ராஷி கண்ணா ஆகியோரது நடிப்பில் வந்த ஃபார்ஸி மற்றும் படல் லோக் ஆகிய இரு வெப் தொடர்கள் என்று கூறியுள்ளார்.
இதே போன்று அஜித் பிடிக்குமா, விஜய் பிடிக்குமா என்ற பழைய கேள்விக்கு பதிலளித்த அவர், தளபதி தான் பிடிக்கும் என்று கூறினார். இரண்டு புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர்களைத் தேர்வு செய்யும்படி அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு எஸ்.ஜே.சூர்யாவை விட பிரகாஷ் ராஜ் தான் தேர்வு செய்தார். ஸ்குவாஷ் சாம்பியனான தீபிகா பல்லிக்கலை மணந்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் மைதானத்திற்கு அப்பால் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்.
இது தவிர, இந்திய கேப்டன்களை அவர்களது தலைமைத்துவ திறமைகளின் படி வரிசைப்படுத்துமாறு அவரிடம் கேட்கப்பட்டது. அதில் முதல் 4 இடங்களில் வரிசையாக எம் எஸ் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரது பெயரை பட்டியலிட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித், பாபர் ஆசம், ஜோ ரூட், விராட் கோலி ஆகியோரது பெயரை குறிப்பிட்டு உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் யோசிக்காத தினேஷ் கார்த்திக் விராட் கோலி என்று பதிலளித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.