Asianet News TamilAsianet News Tamil

ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் அதிர வைத்த இசி வாங்: முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வரலாற்று சாதனை!

யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இசி வாங் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
 

Issy Wong Creates History takes First Hat Trick Wicket in MIW vs UPW WPL Eliminator
Author
First Published Mar 25, 2023, 10:29 AM IST

கடந்த 4ஆம் தேதி தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நாளையுடன் (26 ஆம் தேதி)முடிவடைகிறது. பரபரப்பாக சென்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், யுபி வாரியர்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் 2023: ஜிஎஸ்டி இல்லாமல் மட்டும் ரூ.20,000 வரையிலும் விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்!

யுபி வாரியர்ஸ் அணி:

அலைஸா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷ்வேதா செராவத், சிம்ரன் ஷேக், டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், கிரன் நவ்கிரே, தீப்தி ஷர்மா, சோஃபி எக்லிஸ்டோன், அஞ்சலி சர்வானி, பார்ஷவி சோப்ரா, யஷஸ்ரி.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), மெலி கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா? சச்சின், லியோனல் மெஸ்ஸியை உதாரணமாக சொன்ன ரவி சாஸ்திரி!

அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீராங்கனைகள் பாட்டியா (21) மற்றும் மேத்யூஸ் (26) இருவரும் ஓரளவு ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நாட் ஸ்கிவர் பிரண்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்திய நாட் ஸ்கிவர் பிரண்ட் 38 பந்தில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். மெலி கெர் 19 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களை விளாசினார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

இது என்ன கேகேஆருக்கு வந்த சோதனை: நிதிஷ் ராணாவுக்கு காயம்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? விலகுவாரா?

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 3ம் வரிசையில் இறங்கிய கிரன் நவ்கிரே மட்டுமே நன்றாக ஆடி 27 பந்தில் 43 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொதப்ப, அந்த அணி வெறும் ரன்கள் மட்டுமே அடித்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் 12 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இசி வாங் பந்து வீச வந்தார். அவரது முதல் பந்திலேயே நவ்கிரே கேட்சானார். அடுத்த பந்தில் சிம்ரன் ஷேக் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த சோஃபி எக்லிஸ்டோன் 3ஆவது பந்தில் கிளீன் போல்டானார். இதன் மூலம் இசி வாங் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

என்னுடைய ஆட்டம் இன்னும் வரவேயில்லை; கண்டிப்பாக ஐபிஎல் 2023ல் நடக்கும் என்று நம்புகிறேன்: விராட் கோலி!

அவரது ஹாட்ரிக் விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் ஸ்டேடியமே அதிரும் வகையிலும் கொண்டாடி மகிழ்ந்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயதேயான இசி வாங் 13 சர்வதேச கிரிக்கெட் மட்டுமே விளையாடிருக்கிறார். இவர் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னதாக ஆண்கள் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக இருந்த லட்சுமிபதி பாலாஜி ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios