ஐபிஎல் 2023: ஜிஎஸ்டி இல்லாமல் மட்டும் ரூ.20,000 வரையிலும் விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்!
ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசனுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் விற்று தீர்ந்து வருகிறது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த சீசனின், முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இந்தப் போட்டி பிரமாண்டமாக தொடங்குகிறது.
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகளைப் பார்க்க, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு அணிக்கும் அந்தந்த மைதானங்களுக்கு ஏற்ப டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டுமே ஐபிஎல் டிக்கெட் பெற முடியும். இன்னும் 7 நாட்களில் போட்டி தொடங்கப்படவுள்ள நிலையில், டிக்கெட் விலை, முன்பதிவு மற்றும் பலவற்றைப் பற்றிய ஒவ்வொரு விவரங்களையும் இந்தப் பதிவில் நாம் பார்ப்போம் வாங்க....
ஐபிஎல் 2023 போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ. 800 முதல் ரூ. 25,000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி மற்றும் தகுதிப் போட்டிகளின் விகிதங்களும் வழக்கமான விகிதங்களை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த போட்டிகள் பொதுவாக அதிக தேவையில் உள்ளன.
இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா? சச்சின், லியோனல் மெஸ்ஸியை உதாரணமாக சொன்ன ரவி சாஸ்திரி!
ஐபிஎல் 2023 அணிகள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் பார்ட்னர்:
டிக்கெட் முன்பதிவு விரைவில் ஆன்லைனில் தொடங்கப்படவுள்ள நிலையில், வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு டிக்கெட் பார்ட்னர்கள் இருப்பார்கள். BookMyShow, TicketGenie மற்றும் Paytm Insider ஆகியவை பல்வேறு இடங்களுக்கான டிக்கெட் பார்ட்னர்களாக இருக்கும் தளங்களில் சில.
ஸ்டேடியம் வாரியாக டிக்கெட் விலை:
முன்பே குறிப்பிட்டபடி, போட்டிக்கான டிக்கெட் விலைகள் ஒவ்வொரு இடத்திலும் விளையாட்டின் தன்மையைப் பொறுத்து வேறுபடும். இருப்பினும், பொதுவான விலையானது ரூ.5000 முதல் ரூ.10000 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 16ஆவது சீசன் போட்டிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்ய ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறைகள் இரண்டும் கிடைக்கும். ஆஃப்லைன் முறையில், ஸ்டேடியத்தில் டிக்கெட் கவுன்டர்கள் கிடைக்கும். கவுன்டர் டிக்கெட், போட்டிக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் முறையில், பல்வேறு போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன: அதில் ஒன்று Paytm மற்றொன்று BookMyShow ஆகியவை ஆகும்.
இது என்ன கேகேஆருக்கு வந்த சோதனை: நிதிஷ் ராணாவுக்கு காயம்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? விலகுவாரா?
ஆன்லைனில் BookMyShow மூலம் டிக்கெட் வாங்குவது எப்படி?
ஐபிஎல் சீசனுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மிகவும் எளிதான ஒன்று. ஒரு கணக்கை உருவாக்கி, டிக்கெட் முன்பதிவு பிரிவுக்குச் சென்று, டாடா ஐபிஎல் 2023ஐத் தேர்வு செய்து, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆன்லைனில் Paytm மூலம் டிக்கெட் வாங்குவது எப்படி?
2023 ஐபிஎல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது Paytm மிகவும் எளிமையான ஒன்று. நிகழ்வுப் பகுதியைக் கிளிக் செய்து, Paytm முகப்புப் பக்கத்திலிருந்து Tata IPL 2023ஐத் தேர்ந்தெடுப்பதுதான் செல்ல வழி. ஒருவர் தங்களுடைய சீட் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம், அது அவர்களின் நிலைக்கு ஏற்ப டிக்கெட் விலையில் வேறுபடலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னையில் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான டிக்கெட் விலை ரூ.750 முதல் தொடங்குகிறது. இது தவிர ஆன்லைனில் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வரும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
உள்ளூரில் அதாவது பெங்களூருவில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை ரூ.2250 முதல் தொடங்குகிறது. வெளி மைதானங்களில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை ரூ.1250 முதல் ஆரம்பமாகிறது. இது தவிர ஆன்லைனில் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வரும்.
டெல்லி கேபிடல்ஸ்:
டெல்லியில் நடக்கும் போட்டியின் ஆரம்ப விலை ரூ.850 ஆகும். இது தவிர ஆன்லைனில் டிக்கெட் பெறும் போது ஜிஎஸ்டி வரியும் உண்டு.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தானில் நடக்கும் போட்டிக்கான ஆரம்ப விலை ரூ.950.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தாவில் நடக்கும் போட்டிக்கான ஆரம்ப விலை ரூ.750 ஆகும்.
குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத்தில் நடக்கும் போட்டியின் ஆரம்ப விலை ரூ.800.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
லக்னோவில் நடக்கும் போட்டியின் ஆரம்ப விலை ரூ.750.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியின் ஆரம்ப விலை ரூ.781 ஆகும்.
தற்போது வரையில் ஒரு சில போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டன. அதிகபட்சமாக ரூ.20000 வரையில் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் விற்கப்படுகிறது. இதுதவிர மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி என்று ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி உள்ளூரில் நடக்கும் போட்டிகளுக்கு ஒரு விலையும், வெளியூரில் நடக்கும் போட்டிகளுக்கு ஒரு விலையும் விற்கப்படுகிறது.