பும்ராவுக்கு அறிவுரை வழங்கிய கிரிக்கெட் ஜாம்பவான்: இப்படியெல்லாம் பந்து வீசினால் மறுபடியும் ஆபரேஷன் தான்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் மூலமாக அணிக்கு திரும்பிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

West Indies Cricket legend Curtly Ambrose who advised Jasprit Bumrah: If you bowl like this, it's surgery again!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் அடைந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக மீண்டும் அணிக்கு திரும்பினார். ஆனால், அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில், மீண்டும் காயம் ஏற்படவே டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகினார்.

ஐசிசி ரேங்கிங் பட்டியலில் 2725 புள்ளிகள் பெற்று நம்பர் 1 அணியாக நிரூபித்த பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர், ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்று எதிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரும், வரும் அக்டோபர் 5 ஆம் தேதி ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரும் தொடங்க இருக்கிறது.

தனியார் ஜெட் விமானத்தை வாங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

இதற்கிடையில், அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூலமாக பும்ரா அணிக்கு திரும்பினார். முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பும்ரா தொடர் நாயகன் விருது வென்றார். ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார். ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் மூலமாகத்தான் உலகக் கோப்பைக்கான அணியும் தேர்வு செய்யப்பட உள்ளது.

Asia Cup 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்தியர்கள்!

இந்த நிலையில், பும்ரா குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அம்ப்ரோஸ் கூறியிருப்பதாவது: ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு வேகப்பந்து வீச்சாளர், நான் பார்த்த மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விட அவர் வித்தியாசமானவர். காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு பந்து வீச்சு காரணமாக மீண்டும் காயம் ஏற்படக் கூடாதாவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அவசரப்பட்டு பந்துவீசும் போது முதல் பந்திலேயே தாக்கத்தை உருவாக்க முயற்சி செய்யக் கூடாது.

மெது மெதுவாக அடுத்தடுத்த பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் பார்ககலாம். ஆனால், எடுத்த உடனே முதல் பந்திலேயே செய்ய நினைத்தால் அது உங்களுக்கு காயத்தை தான் ஏற்படுத்தும்.

சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத இலங்கை கிரிக்கெட்டர் வணிந்து ஹசரங்கா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios