இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்கா தனது சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் வணிந்து ஹசரங்கா. இதுவரையில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும், 44 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளும், 55 டி20 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
சர்வதேச நாய்கள் தினம்: செல்லப்பிராணிகளை அதிகம் நேசிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த நிலையில், வணிந்து ஹசரங்கா தனது சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், வணிந்து ஹசரங்கா தனது சகோதரியை கட்டியணைத்து அழுகிறார். இது தனது சகோதரி மீது அவர் வைத்துள்ள பாசத்தின் அடையாளமாக திகழ்கிறது. இதே போன்று அவரது சகோதரியும் கண்ணீர் விட்டு அழும் வீடியோ தான் வைரலாகி வருகிறது.
பயிற்சி போட்டியில் 199 ரன்கள் குவித்து பீல்டிங்கும் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை 2023 தொடர் நடக்க இருக்கிறது. வரும் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. 31 ஆம் தேதி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பெற்றுள்ள வணிந்து ஹசரங்கா காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
