பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்கள்.. பங்கேற்க தகுதி பெற்றார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி - புதிய சாதனை!
சிங்கப்பூரின் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, எதிர்வரும் 2024ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார், இதன் மூலம் சாந்தி ஒரு புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, 2023ம் அன்று புடாபெஸ்டில் உள்ள தேசிய தடகள மையத்தில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் Heat Three போட்டியில், 22.57 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த மூலம் அவர் பாரிஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். சாந்தி பெரேரா, இந்த 200 மீட்டர் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சிங்கப்பூர் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
புடாபெஸ்டில் உள்ள தேசிய தடகள மையத்தில் நடந்த மூன்றாவது அரையிறுதியில் அவர் 22.79 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து ஆறாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு ஹங்கேரியில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நடந்த அரையிறுதி போட்டியில் சிங்கப்பூரின் சாந்தி 200 மீ ஓட்டப்பந்தையதில் வெற்றியை பதிவு செய்த நிலையில் அங்கு நடந்த இறுதிப் போட்டியில் அவர் வெற்றிபெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
மேலும் இந்த போட்டியில் நடப்பு 200 மீட்டர் உலக சாம்பியனான ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் 22.00 வினாடிகளுடன் முதலிடத்தையும், அமெரிக்காவின் ஷாகாரி ரிச்சர்ட்சன் 22.20 வினாடிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்கள்.
முன்னதாக, சாந்தி அவர் பங்கேற்ற முந்தைய மூன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் 200 மீ ஓட்டப்பந்தய பிரிவில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. பெரேரா அடுத்ததாக 100மீ மற்றும் 200மீ போட்டிகளில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.