ஐசிசி ரேங்கிங் பட்டியலில் 2725 புள்ளிகள் பெற்று நம்பர் 1 அணியாக நிரூபித்த பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஐசிசி ரேங்கிங் பட்டியலில் நம்பர் 1 அணியாக வலம் வந்துள்ளது.

Pakistan Become number one team in ICC ODI Rankings after defeat Afghanistan 3-0 in ODI Matches

ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அண்கள் மோதுகின்றன. 2ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இதையடுத்து செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரையில் இந்தியா 7 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளன.

தனியார் ஜெட் விமானத்தை வாங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

ஆசிய கோப்பை 2023 தொடரைத் தொடர்ந்து இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது நடக்கிறது. இந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரு தரப்பு தொடர் நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளதோடு ஆப்கானிஸ்தான் அணியையும் ஒயிட் வாஷ் செய்துள்ளது.

Asia Cup 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்தியர்கள்!

இது பாகிஸ்தானுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து நடக்க உள்ள ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கைப்பற்றியதன் மூலமாக ஐசிசி ரேங்கிங் பட்டியலில் பாகிஸ்தான் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

 

 

இதுவரையில் 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் 2,725 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 2714 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 113 ரேட்டிங் பெற்று 3ஆவது இடமும் பிடித்துள்ளது. 4ஆவது இடத்தில் நியூசிலாந்து அணியும், 5ஆவது இடத்தில் இங்கிலாந்து அணியும் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத இலங்கை கிரிக்கெட்டர் வணிந்து ஹசரங்கா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios