தொடர்ந்து 3ஆவது முறையாக கோல்டன் டக்கில் வெளியேறிய 6ஆவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறியதன் மூலமாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 3ஆவது முறையாக கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியெறினர். ஒருத்தர் கூட அரைசதம் அடிக்காத நிலையிலும் கூட ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் குவித்தது.
இதில், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அக்ஷர் படேல் மற்றும் சிராஜ் இருவரும் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய இந்தியா அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 65 எடுத்தது. ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து அப்பாட் பந்தில் வெளியேறினார். அதன் பிறகு கில்லும் 37 ரன்களில் ஜம்பா ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ஒருத்தர் கூட 50 ரன்கள் அடிக்கல, ஆனாலும், 269 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா 2ஆவது இடம்!
இதையடுத்து சூர்யகுமார் யாதவ் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை கடைசி 15 ஓவர்களில் களமிறக்கலாம் என்று தக்க வைத்தனர். இதன் காரணமாக விராட் கோலியுடன் , கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்தனர். ஸ்டார்க் பந்தில் இருவரும் பவுண்டரியும், சிக்சரும் விளாசினர். அதன் பிறகு வந்த ஜம்பா ஓவரில் கேஎல் ராகுல் சிக்சர் அடிக்க முயறிசித்து ஆட்டமிழந்தார். அவர் 32 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து அக்ஷர் படேல் வந்தார். ஆனால், அவர் எதிர்பாராத வகையில் ரன் அவுட்டில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். கோலி மற்றும் பாண்டியா இருவரும் நிலைத்து நின்று ஆடினர். ஒரு கட்டத்தில் கோலி தனது அரைசதம் அடித்தார். ஆனால், அதன் பிறகு அவர் அதிகமாக அடிக்கவில்லை. 54 ரன்களில் தூக்கி அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். அகர் ஓவரில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அப்போது தான் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஆனால், அவர் வந்த வேகத்தில் ஆஷ்டன் அகரின் பந்தில் கிளீன் போல்டானார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டில் வெளியேறியதன் மூலமாக தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் டக் அவுட்டில் வெளியேறினார். கடந்த 2 ஒரு நாள் போட்டிகளிலும் மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக இது போன்று யாரும் ஆட்டமிழந்தது கிடையாது. முதல் முறையாக ஹாட்ரிக் முறையில் கோல்டன் டக்கில் வெளியேறிய 6ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (1994), அனில் கும்ப்ளே (1996), ஜாகீர்கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017-2019), சூர்யகுமார் யாதவ் (2023) ஆகியோர் தொடர்ந்து 3 முறை ஒரு நாள் தொடரில் ஆட்டமிழந்துள்ளனர்.
ஆசியாவிலேயே 10000 ரன்கள் கடந்த 8ஆவது வீரர் எனற சாதனை படைத்த ரோகித் சர்மா!
அவுட்டான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே மைதானத்திலேயே நின்றுள்ளார். மேலும், அவருக்கு நேரம் சரியில்லை, இப்படிய்யொரு சோதனை வர வேண்டுமா? அவரது நிலையில் இருந்து பார்த்தால் தான் அவரது மன நிலை தெரிய வரும் என்றெல்லாம் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தங்களுக்குள்ளாக பேசினர்.