Asianet News TamilAsianet News Tamil

ஓபனிங் நல்லா தான் இருந்துச்சு, பினிஷிங் சரியில்லையேப்பா - டப்பு டப்புன்னு தூக்கிய ஹர்திக், குல்தீப் யாதவ்!

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  269 ரன்கள் எடுத்துள்ளது.

Australia scored 269 runs against India in 3rd ODI; Hardik Pandya and Kuldeep Yadav Bowled well
Author
First Published Mar 22, 2023, 5:43 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். இதில் பவர்பிளேயான முதல் 10 ஓவர்கள் வரையில் இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. மாறாக, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசி ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலியா முதல் 10 ஓவருக்கு 61 ரன்க்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 11ஆவது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வந்தார். இவரது ஓவரில் டிராவிஸ் ஹெட் (33) ஆட்டமிழந்தார்.

பி.டி.உஷாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் - கேரளாவின் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இதே போன்று, ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டையும் ஹர்திக் பாண்டியா எடுத்தார். கடந்த 2 ஆவது ஒரு நாள் போட்டியில் சீன் அபாட் வீசிய பந்தில் ஹர்திக் பாண்டியா ஸ்லிப் பக்கமாக திருப்ப அங்கு நின்றிருந்த ஸ்மித் கச்சிதமாக கேட்ச் பிடித்து பாண்டியாவை 1 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாண்டியாவின் 13 ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 14.3 ஓவரில் மிட்செல் மார்ஷை அரைசதம் அடிக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்தார்.

 

IND vs AUS Chennai ODI: ரூ. 1500 டிக்கெட்டை ரூ.10000க்கு விற்ற 12 பேர் கைது; போலீஸ் அதிரடி நடவடிக்கை!

ஆரம்பம் முதலே பவுண்டரியும், சிக்சரும் அடித்து வந்தவர் மிட்செல் மார்ஷ். 47 பந்துகளில் அவர் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 47 ரன்கள் குவித்தார். ஹர்திக் ஓவரில் கிளீன் போல்டானார். இதன் மூலம் முதல் 3 விக்கெட்டுகளையும் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா எடுத்துள்ளார். அதன் பிறகு டேவிட் வார்னர் 23 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து மார்னஸ் லபுஷேன் (28), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (25), அலெக்ஸ் கேரி (38), சீன் அபாட் (26), ஆஷ்டன் அகர் (17), மிட்செல் ஸ்டார்க் (10) என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

வாய்ப்பு எப்போவாவது தான் வரும்: கைல விழுந்த கேட்சை கோட்டை விட்ட கில்; கச்சின்னு பிடிச்ச குல்தீப் யாதவ்!

 

 

இறுதியாக ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்தியா வெற்றி பெற 270 ரன்கள் தேவை.

வாய்ப்பு எப்போவாவது தான் வரும்: கைல விழுந்த கேட்சை கோட்டை விட்ட கில்; கச்சின்னு பிடிச்ச குல்தீப் யாதவ்!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios