Asianet News TamilAsianet News Tamil

வாய்ப்பு எப்போவாவது தான் வரும்: கைல விழுந்த கேட்சை கோட்டை விட்ட கில்; கச்சின்னு பிடிச்ச குல்தீப் யாதவ்!

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடி வரும் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஹெட் கொடுத்த எளிதான கேட்சை சுப்மன் கில் கோட்டை விட்டுள்ளார்.
 

Shubman gill dropped catch and kuldeep yadav take a catch to Travis head in Hardik Pandya Over
Author
First Published Mar 22, 2023, 2:53 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்று சமநிலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது.

Shubman gill dropped catch and kuldeep yadav take a catch to Travis head in Hardik Pandya Over

இதில் பவர்பிளேயான முதல் 10 ஓவர்கள் வரையில் இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. மாறாக, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசி ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலியா முதல் 10 ஓவருக்கு 61 ரன்க்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 11ஆவது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வந்தார்.

சேப்பாக்கம் மைதானத்தில் ரஜினியின் பேட்ட சாங்: மரணம் மாஸ் மரணம் பாடலுக்கு உள்ளே வந்த பிளேயர்ஸ்!

இந்த ஓவரில் முதல் பந்தில் மார்ஷ் ஒரு ரன் எடுத்தார். 2ஆவது பந்தை ஹெட் தூக்கி அடித்தார். இடது பக்க பவுண்டரி லைனில் நின்றிருந்த சுப்மன் கில் எளிதான பிடிக்க வேண்டிய கேட்சை அவர் கை நழுவி கோட்டை விட்டார். இதன் காரணமாக பந்து பவுண்டரி சென்றது. இதையடுத்து 5ஆவது பந்தை பேக்வேர்டு பாய்ண்டில் தூக்கி அடிக்க, அங்கு பீல்டிங் நின்றிருந்த குல்தீப் யாதவ் அந்தப் பந்தை கச்சிதமாக பிடித்தார். இதன் மூலமாக ஹெட் 31 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சென்னையில் 50 ஆவது போட்டி: சாதிக்குமா இந்தியா? வார்னரை களமிறக்கிய ஆஸ்திரேலியா பேட்டிங் ஃபர்ஸ்ட்!

இதே போன்று, ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டையும் ஹர்திக் பாண்டியா எடுத்தார். கடந்த 2 ஆவது ஒரு நாள் போட்டியில் சீன் அபாட் வீசிய பந்தில் ஹர்திக் பாண்டியா ஸ்லிப் பக்கமாக திருப்ப அங்கு நின்றிருந்த ஸ்மித் கச்சிதமாக கேட்ச் பிடித்து பாண்டியாவை 1 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாண்டியாவின் 13 ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs AUS Chennai 3rd ODI: போட்டிக்கு நடு நடுவில் மழை பெய்ய வாய்ப்பு - போட்டியில் பாதிப்பு வருமா?

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios