சேப்பாக்கம் மைதானத்தில் ரஜினியின் பேட்ட சாங்: மரணம் மாஸ் மரணம் பாடலுக்கு உள்ளே வந்த பிளேயர்ஸ்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
 

India and Australia Players entered with Rajinikanth Petta Movie Song in Chepauk Stadium

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்று சமநிலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 50 ஆவது போட்டி: சாதிக்குமா இந்தியா? வார்னரை களமிறக்கிய ஆஸ்திரேலியா பேட்டிங் ஃபர்ஸ்ட்!

இந்தியா:

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.

ஆஸ்திரேலியா:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ்,  ஆஷ்டன் அகர், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா

IND vs AUS Chennai 3rd ODI: போட்டிக்கு நடு நடுவில் மழை பெய்ய வாய்ப்பு - போட்டியில் பாதிப்பு வருமா?

அதன்படி ஆஷ்டன் அகர் மற்றும் டேவிட் வார்னர் இடம் பெற்றுள்ளனர். கேமரூன் க்ரீன் உடல் நிலை சரியில்லாத நிலையில் அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் அணியில் இடம் பெற்றுள்ளார். நாதன் எல்லிஸ் இடம் பெறவில்லை. ஏசிநெட் நியூஸ் வெப்சைட்டில் பதிவிட்டபடி இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே அணியுடன் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. கடந்த 17 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 ஸ்டாண்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த 2 ஸ்டாண்டுகளுக்கு கலைஞர் எம் கருணாநிதி ஸ்டாண்டு என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் இந்திய வீரர்கள் மைதானத்திற்குள் வரும் போது ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் இடம் பெற்ற மரணம் மாஸ் மரணம் தரணும் டஃப்பு தரணும் அதுக்கு அவன் தான் பொறந்து வரணும் என்ற பாடல் ஒலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடருக்காக இந்த மைதானத்தில் பயிற்சி செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்றைய போட்டியை காண்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி கூட இந்தப் போட்டியை பார்க்க கூடும்.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 50ஆவது போட்டியில் இந்திய வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios