IND vs AUS Chennai 3rd ODI: போட்டிக்கு நடு நடுவில் மழை பெய்ய வாய்ப்பு - போட்டியில் பாதிப்பு வருமா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி இன்று சென்னையில் நடக்கும் நிலையில் போட்டிக்கு இடையிடையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னையில் பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது. வெற்றியை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கோப்பையை கைப்பற்றும். அப்படியில்லாமல் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் கோப்பையை கைப்பற்றுவதோடு, ஐசிசி ஆண்கள் ODI அணிகளின் தரவரிசையில் முதலிடம் பிடித்து நம்பர் 1 அணியாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை ஒரு நாள் மட்டும், கிரிக்கெட் பார்க்க ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி!
ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலானை இந்திய அணி மோசனமான தோல்வியை தழுவியது. இதன் மாஸ் வீரர்களான சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். இருவரும் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் அது போன்று செய்யாமல் இந்தப் போட்டியில் பொறுப்பாக ஆட வேண்டும். அதுமட்டுமின்றி கேப்டன்ஸி சிக்கலில் சிக்கியுள்ள ரோகித் சர்மா அதனை காப்பாற்றிக் கொள்ள இந்தப் போட்டியில் கண்டிப்பாக பொறுப்பாக விளையாட வேண்டும்.
டீமில் இடமில்லை, டிவி பக்கமாக சென்று போலீஸ் அதிகாரியாக ரவுடிகளை அடித்து விரட்டும் ஷிகர் தவான்!
இதற்கு முன்னதாக மும்பை மற்றும் விசாகப்பட்டினம் மைதானத்தில் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. மாறாக, விசாகப்பட்டினத்தில் காலை வரையில் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மைதானம் முற்றிலுமாக தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் இந்தப் போட்டியில் இடை இடையில் மழையின் குறுக்கீடு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தம்பி டி20ல ஆடுற மாதிரி இதுலயும் ஆடக் கூடாது: சூர்யகுமார் யாதவ்விற்கு, சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: புதன்கிழமை, சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை மற்றும் பலத்த காற்று (மணிக்கு 30-40 கிமீ) மிக அதிகமாக இருக்கும். போட்டி நாளில் சென்னைக்கு ஓரிரு முறை மழை பெய்யக்கூடும். ஆயினும்கூட, மார்ச் 22, புதன் கிழமைக்கான ஆரம்ப வானிலை முன்னறிவிப்புகள், 32 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் வெயில் மற்றும் மங்கலான நாளாக இருந்தது, ஆனால் மாலையில் அந்த குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியாக குறையும் என்று கூறியுள்ளது.
பங்கு ஜெயிச்சுக்கிட்டே இருந்தால் தான் மரியாதை - இந்திய பயிற்சியாளருக்கு ரவி சாஸ்திரி அறிவுரை!
சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்னதாக இரு முறை மோதியுள்ளன. கடந்த 1987 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு ரன்னில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்த நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. என்னவொரு சம்பந்தம் பாருங்க. இந்த மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 3ஆவது போட்டியில் தான் மோதுகின்றன. இன்று நடக்கும் போட்டி கூட 3ஆவது ஒரு நாள் போட்டி.
இந்த மைதானத்தில் இந்திய அணி 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதே நேரத்தில் ஒரு போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சமீபத்திய ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.