பங்கு ஜெயிச்சுக்கிட்டே இருந்தால் தான் மரியாதை - இந்திய பயிற்சியாளருக்கு ரவி சாஸ்திரி அறிவுரை!
தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் பெற்ற வெற்றியை மக்கள் உடனே மறந்துவிடுவார்கள் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே இந்தியா இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் என்று விளையாடி வருகின்றன. ஏற்கனவே இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்கள் முடிந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றிய நிலையில், தற்போது இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது.
ஸ்டார்க் பந்தில் விளையாடுவது ஒன்றும் கஷ்டமில்லை: ஜாகீர் கான் சொன்ன ஈஸியான வழி என்ன தெரியுமா?
இதில், இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் உள்ளன. தற்போது இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது பொறுப்பேற்ற பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் மட்டும் ஒரு நாள் தொடரை இழந்தது ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு கூட செல்ல முடியவில்லை. இவ்வளவு ஏன், உலகக் கோப்பை டி20 தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.
ஆபத்தான கட்டத்தில் இந்தியா: உலக நம்பர் 1 அணிக்கான ரேஸில் ஆஸ்திரேலியா!
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 2-1 என்று வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த நிலையில், தான் ராகுல் டிராவிட்டுக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கியுள்ளார்.
ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக இருந்தவர். இதற்கு முன்னதாக இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ஆதலால், இந்திய அணிக்கு எப்படி பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நல்லாவே தெரியும். நம் நாட்டில் மக்கள் எல்லாவற்றையும் உடனே மறந்துவிடுவார்கள். ஆதலால் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால், வெற்றியை மறந்துவிடுவார்கள். நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த போது 2 முறை இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ஐபில் தொடரிலிருந்து தோனி ஒய்வு பெறுவது எப்போது? தீபக் சாஹர் வெளியிட்ட உண்மை!
ஆனால், இப்போது ஆசிய கோப்பையில் தோற்ற பிறகு தான் அவர்களுக்கு இப்படியொரு தொடர் இருக்கிறது என்று தெரிய வருகிறது என்று கூறியுள்ளார். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கும் உலகக் கோப்பை தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலம் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.