Asianet News TamilAsianet News Tamil

நாளை ஒரு நாள் மட்டும், கிரிக்கெட் பார்க்க ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரையில் மெட்ரோ பயணிகளுக்கு இலவச மினி பஸ் வசதியை மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
 

Free mini bus facility for fans to watch IND vs AUS 3rd ODI in Chennai Chepauk Stadium
Author
First Published Mar 21, 2023, 5:28 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி நாளை சென்னை  சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. ஏற்கனவே இரு அணிகளுமே தலா ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. நாளை நடக்கும் 3ஆவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரையும் கைப்பற்றும். இந்த நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சார்பில் நாளை ஒரு நாள் மட்டும் மினி பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டீமில் இடமில்லை, டிவி பக்கமாக சென்று போலீஸ் அதிகாரியாக ரவுடிகளை அடித்து விரட்டும் ஷிகர் தவான்!

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வருவை தருவார்கள் என்பதால், சென்னை மெட்ரோ ரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரையில் இலவச மினி பஸ் வசதிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வசதி காலை 11.0 மணி முதல் போட்டி முடியும் வரையில் ரசிகர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்பி டி20ல ஆடுற மாதிரி இதுலயும் ஆடக் கூடாது: சூர்யகுமார் யாதவ்விற்கு, சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

பொதுவாக மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் அதிகளவில் டிராஃபிக் இருக்கும். அந்த நேரத்தை நாளை ஒரு நாள் மட்டும் இரவு 10 மணி வரையில் மெட்ரோ நிர்வாகம் நீட்டித்துள்ளது. அதோடு, சென்னை மெட்ரோ ரயில் வாகன நிறுத்தம் இடங்களை கூட ரசிகர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இலவச மினி பஸ் வசதியை பொதுமக்களும், கிரிக்கெட் ரசிகர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கு ஜெயிச்சுக்கிட்டே இருந்தால் தான் மரியாதை - இந்திய பயிற்சியாளருக்கு ரவி சாஸ்திரி அறிவுரை!

Follow Us:
Download App:
  • android
  • ios