தம்பி டி20ல ஆடுற மாதிரி இதுலயும் ஆடக் கூடாது: சூர்யகுமார் யாதவ்விற்கு, சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவ்விற்கு ஆதரவாக முன்னாள் இந்திய அணி வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது ஒரு நாள் போட்டி நாளை சென்னையில் நடக்கிறது. தற்போது ஆபத்தான கட்டத்தில் இருக்கும் இந்தியா நாளை நடக்க உள்ள போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
பங்கு ஜெயிச்சுக்கிட்டே இருந்தால் தான் மரியாதை - இந்திய பயிற்சியாளருக்கு ரவி சாஸ்திரி அறிவுரை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த 2 ஒரு நாள் போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் ஒரே மாதிரியாக அதுவும் கோல்டன் டக்கில் மிட்செல் ஸ்டார்க் ஓவரில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் இடம் பெற செய்ய வேண்டும் என்றெல்லாம் கருத்து எழுந்தது. இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சூர்யகுமார் யாதவிற்கு ஒரு சில பிரச்சனைகள் இருக்கிறது. அதனை சரி செய்தாலே போதும்.
ஸ்டார்க் பந்தில் விளையாடுவது ஒன்றும் கஷ்டமில்லை: ஜாகீர் கான் சொன்ன ஈஸியான வழி என்ன தெரியுமா?
முதலில், டி20 கிரிக்கெட்டிற்கு இருக்க வேண்டிய ஸ்டான்ஸை ஒரு நாள் போட்டிக்கு பயன்படுத்தக் கூடாது. டி20 கிரிக்கெட்டில் ஓபன் ஸ்டான்ஸில் இருக்கும் போது பந்து நன்றாகவே வரும். ஆனால், ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு பந்து அப்படி வராது. திடீரென்று பந்து உள்பக்கமாக திரும்பிவிட்டால் இப்படி தான் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க வேண்டியிருக்கும். இது போன்ற சூழலில் முதலில் அவர் பயிற்சியாளருடன் ஆலோசனை நடத்திக் கொள்ள வேண்டும். டி20 போட்டியில் நம்பர் ஒன் பிளேயராக இருக்கும் சூர்யகுமார் யாதவிற்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான கட்டத்தில் இந்தியா: உலக நம்பர் 1 அணிக்கான ரேஸில் ஆஸ்திரேலியா!