பி.டி.உஷாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் - கேரளாவின் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!
கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் கௌரவ டாக்டர் பட்டம் இந்திய தடகள வீராங்கனை பிடி உஷாவிற்கு வழங்கப்பட இருக்கிறது.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள குத்தாலி என்ற பகுதியில் பிறந்தார். இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிக் பல தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இவர், பய்யோலி எக்ஸ்பிரஸ், கோல்டன் கேர்ள் என்று பிரபலமாக அறியப்படுகிறார். விளையாட்டுத்துறையில் அவர் செய்த முன்மாதிரியான பங்களிப்பிற்காக அவரை கவுரவிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 58 வயதான உஷா, முன்னாள் இந்திய ரயில்வே அதிகாரி இருந்துள்ளார். தற்போது ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினராக உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 19 தங்கம் உட்பட 33 பதக்கங்களை வென்றுள்ளார். தொடர்ந்து நான்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கடந்த 1985 ஆம் ஆண்டு நடந்த ஜகார்த்தா ஆசிய தடகளப் போட்டியில் 5 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றார்.
இவர், தனது சொந்த மாவட்டமான கோழிக்கோடு கினாலூரில் உஷா தடகளப் பள்ளியை நிறுவினார். மேலும் அவரது வார்டுகள் இதுவரை நாட்டிற்காக 79 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளன. இந்த நிலையில், இவருக்கு, கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் கௌரவ டாக்டர் பட்டம் இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. உஷாவை கௌரவிக்கும் விழாவை ஏற்பாடு செய்ய மத்திய பல்கலைக்கழகம் தற்போது வசதியான தேதியை முடிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.