ஒருத்தர் கூட 50 ரன்கள் அடிக்கல, ஆனாலும், 269 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா 2ஆவது இடம்!
இந்தியாவுக்கு எதிராக 3ஆவது ஒரு நாள் போட்டியின் ஒருத்தர கூட 50 ரன்கள் அடிக்காமல் இருந்த போதிலும் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 269 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி வழக்கம் போல் டிராவிட் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். பவுண்டரியும், சிக்சரும் விளாசிய இருவரும் முதல் 10 ஓவருக்கு 61 ரன்கள் குவித்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா பந்து வீச வந்தார். இவரது ஓவரில் டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார். இதன் மூலமாக ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை 5 முறை ஹர்திக் பாண்டியா கைப்பற்றியுள்ளார்.
இதே போன்று மிட்செல் மார்ஷூம் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா ஓவரில் கிளீன் போல்டானார். அவர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 பந்துகளில் ஒரு சிக்சர்கள் 8 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வார்னர் (23), மார்னஸ் லபுஷேன் (28), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (25), அலெக்ஸ் கேரி (38), சீன் அபாட் (26), ஆஷ்டன் அகர் (17), மிட்செல் ஸ்டார்க் (10) என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பி.டி.உஷாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் - கேரளாவின் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!
இறுதியாக ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. ஒருவர் கூட அரைசதம் அடிக்காத போதும் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 269 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக யாரும் 50 ரன்கள் எடுக்காமல் இருந்த போது 250 ரன்களுக்கு மேல் 4 அணிகள் எடுத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
இதற்கு முன்னதாக 50 ரன்கள் எடுக்காமல் அதிகபட்ச ரன்கள் எடுத்த அணிகள்:
2013 - நெதர்லாந்து - அயர்லாந்து - ஆம்ஸ்டெல்வீன் - 268/9
2023 - ஆஸ்திரேலியா - இந்தியா - சென்னை - 269/10
2006/07 - நெதர்லாந்து - கனடா - போட்செஃப்ஸ்ட்ரூம் - 271/8
2004/05 - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் - அடிலெய்டு - 281/9
2006 - இங்கிலாந்து - இலங்கை - மான்செஸ்டர் - 285/10