அங்கிட்டு விரட்டுனா இங்கிட்டு வருது, இங்கிட்டு விரட்டுனா அங்கிட்டு போகுது - படாதபாடு பட்டு விரட்டிய பாதுகாவலர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது மைதானத்திற்குள் நாய் வந்ததால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.
 

Dog disturbs the Australia Batting against India in 3rd ODI

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலா 3ஆவது ஒரு நாள் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார். ஹெட் 33 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் வார்னர் (23), மார்னஸ் லபுஷேன் (28), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (25), அலெக்ஸ் கேரி (38) என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். போட்டியின் 43ஆவது ஓவரில் சீன் அபாட் மற்றும்  ஆஷ்டன் அகர் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆசியாவிலேயே 10000 ரன்கள் கடந்த 8ஆவது வீரர் எனற சாதனை படைத்த ரோகித் சர்மா!

அப்போது மைதானத்திற்கு நாய் ஒன்று வந்தது. அதனை விரட்ட பாதுகாவலர்கள் ஒருபுறம் விரட்டினால், மற்றொரு புறம் ஓடுகிறது. அந்த பக்கம் விரட்டினால் இந்தப் பக்கம் ஓடுயது. இப்படியே கொஞ்ச நேரம் மைதானத்திற்குள் புகுந்த நாய் ஆட்டம் காட்டியது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதைப் பார்த்த ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே இருந்தார். 

ஒருத்தர் கூட 50 ரன்கள் அடிக்கல, ஆனாலும், 269 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா 2ஆவது இடம்!

ஒரு வழியாக மைதானத்தை தாண்டி நாய் வெளியில் சென்றது. அதன் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. சீன் அபாட் (26), ஆஷ்டன் அகர் (17), மிட்செல் ஸ்டார்க் (10) என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. ஒருவர் கூட அரைசதம் அடிக்காத போதும் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 269 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக யாரும் 50 ரன்கள் எடுக்காமல் இருந்த போது 250 ரன்களுக்கு மேல் 4 அணிகள் எடுத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

ஓபனிங் நல்லா தான் இருந்துச்சு, பினிஷிங் சரியில்லையேப்பா - டப்பு டப்புன்னு தூக்கிய ஹர்திக், குல்தீப் யாதவ்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios