ஆசியாவிலேயே 10000 ரன்கள் கடந்த 8ஆவது வீரர் எனற சாதனை படைத்த ரோகித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் ஆசியாவில் 10,000 ரன்களை கடந்த 8வது இந்தியர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலா 3ஆவது ஒரு நாள் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார். ஹெட் 33 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் வார்னர் (23), மார்னஸ் லபுஷேன் (28), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (25), அலெக்ஸ் கேரி (38), சீன் அபாட் (26), ஆஷ்டன் அகர் (17), மிட்செல் ஸ்டார்க் (10) என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஒருத்தர் கூட 50 ரன்கள் அடிக்கல, ஆனாலும், 269 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா 2ஆவது இடம்!
இறுதியாக ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. ஒருவர் கூட அரைசதம் அடிக்காத போதும் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 269 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக யாரும் 50 ரன்கள் எடுக்காமல் இருந்த போது 250 ரன்களுக்கு மேல் 4 அணிகள் எடுத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
இதையடுத்து 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி ஆடி வருகிறது. இதில், ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக, அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆசியாவில் 10000 ரன்களை கடந்த 8வது இந்தியர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். அதுமட்டுமின்றி அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். 256 சிக்சர்கள் விளாசி மார்ட்டின் குப்தில் உடன் இணைந்துள்ளார்.
அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள்:
256 சிக்சர்கள் - ரோகித் சர்மா - இந்தியா
256 சிக்சர்கள் - மார்ட்டின் குப்தில் - நியூசிலாந்து
230 சிக்சர்கள் - பிரெண்டன் மெக்கலம் - நியூசிலாந்து
228 சிக்சர்கள் - கிறிஸ் கெயில் - வெஸ்ட் இண்டீஸ்
186 சிக்சர்கள் - எம் எஸ் தோனி - இந்தியா