பஞ்சாப்பை துரத்தியடித்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 66ஆவது போட்டி நேற்று தர்மசாலா மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராம்சிம்ரன் சிங் 2 ரன்னிலும், ஷிகர் தவான் 17 ரன்னிலும், அதர்வா டைடு19 ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
WTC Final - 3 பேட்ஜாக லண்டன் புறப்படும் டீம் இந்தியா!
கடைசியாக இணைந்து சாம் கரண், ஜித்தேஷ் சர்மா இருவரும் இணைந்து சிக்ஸரும், பவுண்டரியும் விரட்டினர். ஜித்தேஷ் சர்மா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக வந்த ஷாருக்கான் 41 ரன்களும், சாம் கரண் 49 ரன்களும் எடுக்கவே பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தனர். கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் 46 ரன்கள் எடுத்தது.
சென்னைக்கு எதிராக ஜெர்சியை மாற்றி விளையாடும் டெல்லி: ரெயின்போ ஜெர்சி ராசி!
பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் டக் அவுட்டில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 30 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் நிலைத்து நிறு ஆடாமல் அவசப்பட்டு ஆடி 2 ரன்களில் வெளியேறினார்.
மும்பை மற்றும் பெங்களூரு தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வாய்ப்பு!
இதையடுத்து வெற்றியின் நாயகன் என்று சொல்லப்படும் ஷிம்ரான் ஹெட்மயர் களமிறங்கினார். அவர், 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களில் வெளியேறினார். ரியான் பராக் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2, 1, 1, 6 என்று ரன்கள் துருவ் ஜூரெல் மற்றும் டிரெண்ட் போல்ட் இருவரும் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது. ஏற்கனவே 5ஆவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து 3ஆவது அணியாக வெளியேறியது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 9ஆவது சீசனாக ஐபிஎல் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.