சென்னைக்கு எதிராக ஜெர்சியை மாற்றி விளையாடும் டெல்லி: ரெயின்போ ஜெர்சி ராசி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் ரெயின்போ ஜெர்சி அணிந்து நாளை விளையாட இருக்கிறது.

Delhi Capitals will be wearing a Rainbow jersey against Chennai Super Kings in 67th IPL Match

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. தற்போது இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. இதில், ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. சென்னை, பஞ்சாப், மும்பை, லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் தங்களது பிளே ஆஃப் வாய்ப்புக்காக போராடி வருகின்றன. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

மும்பை மற்றும் பெங்களூரு தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வாய்ப்பு!

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ரெயின்போ ஜெர்சி அணிந்து விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக இப்படி ரெயின்போ ஜெர்சி அணிந்து விளையாடிய போட்டிகளில் எல்லாம் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஜெர்சி நம்பரும் 18, சதம் அடித்த நாளும் 18; மே 18, 2016 – கையில் 8 தையல் போட்டு சதம் அடித்த விராட் கோலி!

 

 

இதே போன்று, 2021 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ரெயின்போ ஜெர்சி அணிந்து டெல்லி கேபிடல்ஸ் விளையாட இருக்கிறது.

டெல்லியில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும்.

அய்யோ போச்சே: விராட் கோலி சதம் அடித்ததைக் கண்டு மோசமாக ரியாக்‌ஷன் கொடுத்த காவ்யா மாறன்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios