ஜெர்சி நம்பரும் 18, சதம் அடித்த நாளும் 18; மே 18, 2016 – கையில் 8 தையல் போட்டு சதம் அடித்த விராட் கோலி!
கடந்த 2016 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி கையில் 8 தையல் போட்ட நிலையில் சதம் அடித்திருந்தார்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் 6 சதங்கள் அடித்து முன்னாள் ஆர்சிபி வீரர் கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்துள்ளார்.
அய்யோ போச்சே: விராட் கோலி சதம் அடித்ததைக் கண்டு மோசமாக ரியாக்ஷன் கொடுத்த காவ்யா மாறன்!
அதோடு பல சாதனைகளையும் படைத்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி இந்த சீசனில் தற்போது வரையில் 538 ரன்கள் விளாசியுள்ளார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியுடன் களமிறங்கியது. இந்தப் போட்டியில் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதே போன்று, கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த போட்டியிலும் விராட் கோலி டக் அவுட்டில் வெளியேறியிருந்தார். ஆகையால் ஏப்ரல் 23 ஆம் தேதியை விராட் கோலிக்கு ராசியே இல்லாத நாளாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
ஐபிஎல்லில் கிங் என்றால் அது கோலி தான்: விராட் படைத்த சாதனை துளிகள்!
விராட் கோலியின் ஜெர்சி நம்பரோ 18. அவருக்கு ராசியான நம்பரும் 18 என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால், மே 18 ஆம் தேதியான நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 6ஆவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கையில் காயம் அடைந்து 8 தையல்களுடன் சதம் விளாசியிருந்தார்.
5 முறை சாம்பியன்: மும்பைக்கே ஆப்பு வைக்கும் ஆர்சிபி!
அதே போன்று 2015 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 18 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டி20, ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதம் விளாசி பல சாதனைகளை படைத்து கிங் என்று நிரூபித்துள்ளார்.