அய்யோ போச்சே: விராட் கோலி சதம் அடித்ததைக் கண்டு மோசமாக ரியாக்‌ஷன் கொடுத்த காவ்யா மாறன்!

விராட் கோலி சதம் அடித்ததைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மோசமாக ரியாக்‌ஷன் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SRH owner Kavya Maran gave a bad reaction to Virat Kohli hundred

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 65ஆவது ஐபிஎல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹென்றிச் கிளாசென் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உள்பட 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிளாசென் சதம் அடித்ததைக் கண்டு துள்ளிக்குதித்து அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், அவர் ஒவ்வொரு சிக்ஸர் அடிக்கும் போது கை தட்டி ஆரவாரம் செய்தார்.

ஐபிஎல்லில் கிங் என்றால் அது கோலி தான்: விராட் படைத்த சாதனை துளிகள்!

இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது. பின்னர், ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவருமே வெற்றி இலக்கை அடைந்தனர். எனினும், கடைசியில் இருவரும் ஆட்டமிழக்க மேக்ஸ்வெல் மற்றும் பிரேஸ்வெல் இருவரும் எளிதில் வெற்றி பெற்றுக் கொடுத்தனர்.

5 முறை சாம்பியன்: மும்பைக்கே ஆப்பு வைக்கும் ஆர்சிபி!

 

 

இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய விராட் கோலி 63 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் உள்பட 100 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கோலி சிக்ஸர் அடித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 6 ஆவது சதத்தை நிறைவு செய்தார். அவர் சிக்ஸர் அடித்ததைக் கண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மோசமாக ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பர விதிகளை மீறும் பிரபலங்களின் பட்டியலில் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி முதலிடம்!

ஆனால், கிளாசென் சதம் அடித்ததைக் கண்டு அவருக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை விராட் கோலி வெளிப்படுத்தியிருந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சரவெடியாக வெடித்த விராட் கோலி அண்ட் ப்ளெசிஸ்; கொண்டாடும் ஆர்சிபி பிளேயர்ஸ்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios