சரவெடியாக வெடித்த விராட் கோலி அண்ட் ப்ளெசிஸ்; கொண்டாடும் ஆர்சிபி பிளேயர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 65ஆவது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய ஹைதராபாத் அணியில் ஹென்ரிச் கிளாசென் அதிரடி சரவெடியாக சிக்ஸரும் பவுண்டரியுமாக அடிக்க அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதில் கிளாசென் 51 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விளம்பர விதிகளை மீறும் பிரபலங்களின் பட்டியலில் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி முதலிடம்!
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் இணைந்து அணியை வெற்றி பெறச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலி 100 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 12 பவுண்டரியும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இதே போன்று கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
சதத்தையும், வெற்றியையும் கோட்டைவிட்ட லிவிங்ஸ்டன்; பஞ்சாப்புக்கு ஆப்பு வச்ச டெல்லி!
இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னர்!