ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னர்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 25 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் 1084 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Delhi Capitals Skipper David Warner Scored thousand Plus Runs against PBKS in IPL

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 64ஆவது ஐபிஎல் போட்டி தற்போது தர்மசாலா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிருத்வி ஷா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரைலி ரூஸோவ் அதிரடியாக ஆடி 82 ரன்கள் சேர்த்தார். இதே போன்று பிலிப் சால்ட் 26 ரன்கள் எடுத்தார். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

சூறாவளி காத்து மாதிரி சுத்தி சுத்தி அடிச்ச பிருத்வி ஷா, ரைலி ரூஸோவ்: டெல்லி 213 ரன்கள் குவிப்பு!

இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுத்திருந்த போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் 1084 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.  இறுதியாக வார்னர் 46 ரன்கள் எடுக்க மொத்தமாக 1105 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1075 ரன்கள் எடுத்துள்ளார்.

6 போட்டியில் மொத்தமே 47; திரும்ப வந்துட்டேன்னு 50 அடிச்சு சொல்லிக் காட்டிய பிருத்வி ஷா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் 1057 ரன்கள் எடுத்துள்ளார். கேகேஆர் அணிக்கு எதிராக ரோகித் சர்மா 1040 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி 1030 ரன்கள் குவித்துள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் பாண்டிங் ஒயின்ஸ்; தொடங்கி வைத்த ரிக்கி பாண்டிங்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios