6 போட்டியில் மொத்தமே 47; திரும்ப வந்துட்டேன்னு 50 அடிச்சு சொல்லிக் காட்டிய பிருத்வி ஷா!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிருத்வி ஷா பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து தான் திரும்ப வந்துவிட்டதாக காண்பித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 64ஆவது ஐபிஎல் போட்டி தற்போது தர்மசாலாவில் நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தர்மசாலாவில் நடக்கும் போட்டி. அதுவும், முதல் ஐபிஎல் போட்டி என்பதால், இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டெல்லி விமான நிலையத்தில் பாண்டிங் ஒயின்ஸ்; தொடங்கி வைத்த ரிக்கி பாண்டிங்!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். இதில், முதல் 2 ஓவர்களில் டெல்லி அணி 6 ரன்கள் மட்டுமெ எடுத்திருந்தது. அதன் பிறகு 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து பவர்பிளேயில் 61 ரன்கள் குவித்தது.
இதையடுத்து வார்னர் மற்றும் பிருத்விஷ் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்தனர். வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கிய பிருத்வி ஷா அதன் பிறகு பவுண்டரியும், சிக்ஸருமாக அடித்து இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதோடு தான் திரும்பவும் வந்துவிட்டதாக தன்னை நிரூபித்துள்ளார். 35 பந்துகளில் அரைசதம் அடித்த பிருத்வி ஷா, அதன் பிறகு 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி அடங்கும். ஆனால், இதற்கு முன்னதாக விளையாடிய 6 போட்டிகளில் மொத்தமாக 47 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகமே 15 ரன்னாக இருந்தது. ஆனால், இன்றைய போட்டியில் 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
எனினும், ஐபிஎல் தொடரிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் வெளியேறிவிட்டது. இருந்தாலும் வரும் 20 ஆம் தேதி டெல்லியில் சென்னையை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளே ஆஃப் சென்ற குஜராத்: 7 அணிகள் 3 இடங்கள்: சிஎஸ்கே, மும்பை, ஆர்ஆர், ஆர்சிபி நிலை என்ன?