காயத்திற்கு மருந்து போட களமிறங்கும் பிருத்வி ஷா: பிளே ஆஃப் கனவில் பஞ்சாப்: டாஸ் ஜெயிச்சு பீல்டிங் தேர்வு!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 64ஆவது ஐபிஎல் போட்டி தர்மசாலாவில் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தர்மசாலாவில் நடக்கும் ஐபிஎல் போட்டி என்பதால், அனைவரிடமும் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
பிளே ஆஃப் சென்ற குஜராத்: 7 அணிகள் 3 இடங்கள்: சிஎஸ்கே, மும்பை, ஆர்ஆர், ஆர்சிபி நிலை என்ன?
டெல்லி கேபிடல்ஸ்:
டேவிட் வார்னர் (கேப்டன்), பிருத்வி ஷா, பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), ரிலே ரோஸோவ், அக்ஷர் படேல், அமன் கான், யாஷ் துல், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்கியா, இஷாந்த் சர்மா, கலீல் சர்மா
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான் (கேப்டன்), அதர்வா டைடு, லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரண், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சகார், கஜிகோ ரபாடா, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்
பழிக்கு பழி வாங்குமா இல்லை பஞ்சாப்பின் பிளே ஆஃப் சுற்றுக்காக விட்டுக் கொடுக்குமா டெல்லி?
இதுவரையில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திற்கு முன்னேறும். மேலும், கடைசி போட்டியில் வெற்றி பெற்று, மற்ற அணிகள் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும்.
ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், வெற்றியோடு வெளியில் செல்ல நினைக்கும். இன்னும் ஒரு போட்டி உள்ள நிலையில், எப்படியும் வெற்றியோடு வெளியேற நினைக்கும். இதுவரையில் மோசமான பார்ம் காரணமாக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடிய பிருத்வி ஷா அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுத்து அவரது பாதுகாப்பை பலப்படுத்திய மேற்கு வங்க அரசு!
தர்மசாலா மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறும். 9 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடக்கிறது. இமாசலப்பிரதேசம் கிரிக்கெட் அசோசியேஷன் உலகின் சமீபத்திய கழிவுநீர் வடிகால் அமைப்பை நிறுவியுள்ளது.
மோசமான ஆடுகளங்களால் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்படாமல் இருப்பதை Sub-air system உறுதி செய்யும். மழை பெய்தாலும் நவீன முறையில் 20 நிமிடங்களில் ஆடுகளத்தை உலர்த்தி விடலாம். காற்றழுத்தத்தைப் பயன்படுத்தி அவுட்ஃபீல்டு முழுவதும் துளையிடப்பட்ட குழாய்களைக் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படும்.
லக்னோ கொடுத்த அதிர்ச்சி:புதிய சிக்கலில் சிஎஸ்கே: பிளே ஆஃப் செல்லுமா சென்னை?
கடந்த 20218 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 2 டி20 போட்டிகள் மட்டுமே இந்த மைதானத்தில் நடந்துள்ளது. இதில், 2 போட்டியிலும் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 31 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் 15 போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் 16 போட்டியிலும் வெற்றி கண்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லி கேபிடல்ஸ் 231 ரன்னும், குறைந்தபட்சமாக 67 ரன்னும் எடுத்துள்ளது. இதே போன்று பஞ்சாப் அதிகபட்சமாக 202 ரன்னும், குறைந்தபட்சமாக 104 ரன்னும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, கடந்த 13 ஆம் தேதி நடந்த டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.