பழிக்கு பழி வாங்குமா இல்லை பஞ்சாப்பின் பிளே ஆஃப் சுற்றுக்காக விட்டுக் கொடுக்குமா டெல்லி?

டெல்லிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் 5ஆவது இடத்திற்கு முன்னேறும்.

Is Punjab Kings Will Move to 5th Place?

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. எனினும் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 64ஆவது போட்டி நடக்கிறது.

கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுத்து அவரது பாதுகாப்பை பலப்படுத்திய மேற்கு வங்க அரசு!

தர்மசாலா மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறும். 9 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடக்கிறது. இமாசலப்பிரதேசம் கிரிக்கெட் அசோசியேஷன் உலகின் சமீபத்திய கழிவுநீர் வடிகால் அமைப்பை நிறுவியுள்ளது.

லக்னோ கொடுத்த அதிர்ச்சி:புதிய சிக்கலில் சிஎஸ்கே: பிளே ஆஃப் செல்லுமா சென்னை?

மோசமான ஆடுகளங்களால் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்படாமல் இருப்பதை Sub-air system உறுதி செய்யும். மழை பெய்தாலும் நவீன முறையில் 20 நிமிடங்களில் ஆடுகளத்தை உலர்த்தி விடலாம். காற்றழுத்தத்தைப் பயன்படுத்தி அவுட்ஃபீல்டு முழுவதும் துளையிடப்பட்ட குழாய்களைக் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படும்.

தெரு நாய் கடித்து அர்ஜூன் டெண்டுல்கர் காயம்: பந்து வீச முடியாமல் அவதி!

கடந்த 20218 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 2 டி20 போட்டிகள் மட்டுமே இந்த மைதானத்தில் நடந்துள்ளது. இதில், 2 போட்டியிலும் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 31 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் 15 போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் 16 போட்டியிலும் வெற்றி கண்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லி கேபிடல்ஸ் 231 ரன்னும், குறைந்தபட்சமாக 67 ரன்னும் எடுத்துள்ளது. இதே போன்று பஞ்சாப் அதிகபட்சமாக 202 ரன்னும், குறைந்தபட்சமாக 104 ரன்னும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய தந்தைக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன் - மோசின் கான்!

இதற்கு முன்னதாக, கடந்த 13 ஆம் தேதி நடந்த டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios