தெரு நாய் கடித்து அர்ஜூன் டெண்டுல்கர் காயம்: பந்து வீச முடியாமல் அவதி!
தெரு நாய் கடித்த நிலையில் அர்ஜூன் டெண்டுல்கர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான 63ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டிக்கு முன்னதாக வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு அணி வீரர்களும் பேசிக் கொண்டனர். இதில், லக்னோ வீரர் ஒருவர் அர்ஜூன் டெண்டுல்கர் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
10 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய தந்தைக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன் - மோசின் கான்!
அதற்கு பதிலளித்த சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மகன் தனது இடது கையில் நாய் கடித்துவிட்டதாக கூறியுள்ளார். என்னது நாயா என்று கேட்க, 2 நாட்களுக்கு முன்பு என்று பதிலளித்துள்ளார். அர்ஜூன் டெண்டுல்கர் தனது பந்துவீச்சு வேகத்தை அதிகரிக்க மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், அவர் தெரு நாயோடு கொஞ்சி விளையாடியிருக்கிறார்.
தவறான ஷாட் அடிக்க போய் கிளீன் போல்டான சூர்யகுமார் யாதவ்: வைரலாகும் வீடியோ!
அப்போது நாய் அவரது கையை கடித்துவிட்டது. இதனால், காயமடைந்த அர்ஜூன் டெண்டுல்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் பந்து வீச முடியாத நிலையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர் 9.5 ஓவர்கள் வரையில் வீசி 92 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதன் பிறகு அவர் எந்தப் போட்டியிலும் இடம் பெறவில்லை. இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருக்கிறது. தற்போது 14 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.