11 ரன்கள் அடிக்க முடியாமல் திணறிய டிம் டேவிட், க்ரீன் - 5 ரன்களில் வெற்றி பெற்று 3ஆவது இடத்திற்கு சென்ற லக்னோ!

லக்னோவிற்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது.

LSG Beat MI by 5 Runs Difference in 63rd IPL Match at Ekana Cricket Stadium Lucknow

லக்னோவின் கோட்டை என்று சொல்லக் கூடிய ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 63ஆவது ஐபிஎல் போட்டி நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் ஆடியது.

இனி நோபாலில் பேட்ஸ்மேனுக்கு ரன் – ஐசிசியின் புதிய விதிமுறைகள் ஜூன் 1ல் அமல்!

இதில், கைல் மேயர்ஸ்க்கு பதிலாக தீபக் கூடா களமிறங்கினார். எனினும், அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரேரக் மான்கட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.  அடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் களமிறங்கினார். குர்ணல் பாண்டியா 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

லக்னோவை வீழ்த்தி 2ஆவது இடம் பிடிக்குமா மும்பை? சென்னையின் நிலைமை?

இதையடுத்து நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். ஆனால், அவர் 8 பந்துகள் மட்டுமே விளையாடினார். அடித்தும் ஆடவில்லை. மாறாக ஒருபுறம் அதிரடியாக சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிய ஸ்டோய்னிஸிற்கு சிங்கிள் தட்டிக் கொடுத்தார். 47 பந்துகள் ஆடிய ஸ்டோய்னிஸ் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 89 ரன்கள் குவித்தார்.

பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து, 2ஆவது அணியாக வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஒரு கட்டத்தில் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் ஸ்டோய்னிஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது. ரெவியூ கேட்டு நடையை கட்ட தொடங்கினார். ஆனால், ரெவியூவில் அவுட் இல்லை என்று வரவே மறுபடியும் வந்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

முகமது ஷமி, மோகித் சர்மா வேகத்தில் சிக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; முதல் அணியாக பிளே ஆஃப் சென்ற GT!

ஜோர்டன் வீசிய 18ஆவது ஓவரில் ஸ்டோய்னிஸ் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் அடித்தார். இதே போன்று பெஹரண்டார்ஃப் ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். கடையாக மத்வால் ஓவரிலும் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்கவே, லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது.

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 59 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 16 ரன்களில் வெளியேறினார்.

இறுதியாக கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியாக மும்பை வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கேமரூன் க்ரீன் மற்றும் டிம் டேவிட் இருவரும் இருந்தனர். கடைசி ஓவரை மோசின் கான் வீசினார். அந்த ஓவரில் 2 பவுண்டரி அடித்திருந்தால் கூட எளிதில் மும்பை ஜெயிச்சிருக்கும். ஆனால், அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

யாருக்கு வாய்ப்பு அதிகம்? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது?

இந்த தோல்வியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சிய நிலையில் அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனினும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios