முகமது சிராஜ்ஜின் புதிய வீடு திறப்பு விழாவிற்கு விசிட் அடித்த விராட் கோலி அண்ட் டீம்!
ஹைதாரபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள முகமது சிராஜ் புதிய வீட்டிற்கு விராட் கோலி உள்பட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் சென்றுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியாகியுள்ளன. இதைவிட குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. கடந்த சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் சாதனையை முறியடித்த கில்; நேற்றைய போட்டியின் சாதனைகள் லிஸ்ட் இதோஇதுவரையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் 12 போட்டிகளில் விளையாடி 42 ஓவர்கள் வீசி 327 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் ஒரேயொரு முறை மட்டும் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து, 2ஆவது அணியாக வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
இதுவரையில் 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் தற்போது வரையில் 78 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சிராஜ், ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு விராட் கோலி உள்பட மற்ற ஆர்சிபி வீரர்கள் அணிவகுத்து சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முகமது ஷமி, மோகித் சர்மா வேகத்தில் சிக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; முதல் அணியாக பிளே ஆஃப் சென்ற GT!
யாருக்கு வாய்ப்பு அதிகம்? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது?