சூறாவளி காத்து மாதிரி சுத்தி சுத்தி அடிச்ச பிருத்வி ஷா, ரைலி ரூஸோவ்: டெல்லி 213 ரன்கள் குவிப்பு!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 213 ரன்கள் குவித்துள்ளது.

Delhi Capitals Scored 213 runs against Punjab Kings in 64th IPL Match at Dharmasala

தர்மசாலாவில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 64ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். இதில், முதல் 2 ஓவர்களில் டெல்லி அணி 6 ரன்கள் மட்டுமெ எடுத்திருந்தது. அதன் பிறகு 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து பவர்பிளேயில் 61 ரன்கள் குவித்தது.

6 போட்டியில் மொத்தமே 47; திரும்ப வந்துட்டேன்னு 50 அடிச்சு சொல்லிக் காட்டிய பிருத்வி ஷா!

இதையடுத்து வார்னர் மற்றும் பிருத்விஷ் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்தனர். வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கிய பிருத்வி ஷா அதன் பிறகு பவுண்டரியும், சிக்ஸருமாக அடித்து இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால், அவர் 38 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி உள்பட 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

டெல்லி விமான நிலையத்தில் பாண்டிங் ஒயின்ஸ்; தொடங்கி வைத்த ரிக்கி பாண்டிங்!

இதையடுத்து ரைலி ரூஸோவ் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் ஜோடி சேர்ந்து சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்து 200 ரன்களுக்கு மேல் ரன்கள் சேர்த்தனர். ரைலி ரூஸோவ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன் பிறகு அவர் 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் சேர்த்தார். அதே போன்று சால்ட் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

காயத்திற்கு மருந்து போட களமிறங்கும் பிருத்வி ஷா: பிளே ஆஃப் கனவில் பஞ்சாப்: டாஸ் ஜெயிச்சு பீல்டிங் தேர்வு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios