சதத்தையும், வெற்றியையும் கோட்டைவிட்ட லிவிங்ஸ்டன்; பஞ்சாப்புக்கு ஆப்பு வச்ச டெல்லி!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

DC beat PBKS by 15 Runs Difference in IPL 64th Match in IPL

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 64ஆவது ஐபிஎல் போட்டி தற்போது தர்மசாலா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னர்!

பிருத்வி ஷா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரைலி ரூஸோவ் அதிரடியாக ஆடி 82 ரன்கள் சேர்த்தார். இதே போன்று பிலிப் சால்ட் 26 ரன்கள் எடுத்தார். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

சூறாவளி காத்து மாதிரி சுத்தி சுத்தி அடிச்ச பிருத்வி ஷா, ரைலி ரூஸோவ்: டெல்லி 213 ரன்கள் குவிப்பு!

கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிராப்சிம்ரன் 22 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அதர்வா டைடு அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார். அடுத்து இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த ஜித்தேஷ் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

6 போட்டியில் மொத்தமே 47; திரும்ப வந்துட்டேன்னு 50 அடிச்சு சொல்லிக் காட்டிய பிருத்வி ஷா!

ஷாருக்கானோ 6 ரன்களில் வெளியேற பஞ்சாப் வெற்றி கனவாகவே இருந்தது. சாம் கரண் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் வெற்றிக்கு 5 ஓவர்களில் 85 ரன்கள் தேவைப்பட்டது. லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடியாக பஞ்சாப் வெற்றியின் மிக அருகில் வந்தது. கடைசி ஓவருக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் பாண்டிங் ஒயின்ஸ்; தொடங்கி வைத்த ரிக்கி பாண்டிங்!

ஆனால், 17 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. லியாம் லிவிங்ஸ்டன் 48 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உள்பட 94 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலேயே நீடிக்கிறது. மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவும் பறிபோனது. டெல்லி கேபிடல்ஸ் 10 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திற்கு முன்னேறியது. வரும் 20 ஆம் தேதி டெல்லியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios