MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?

IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இந்தியா அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Feb 27 2026, 12:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அரையிறுதி கணக்குகள் தீர்ந்தன.. வெஸ்ட் இண்டீஸ் தோல்வியால் டீம் இந்தியாவிற்கு வாய்ப்பு அதிகரிப்பு
Image Credit : BCCI/X

அரையிறுதி கணக்குகள் தீர்ந்தன.. வெஸ்ட் இண்டீஸ் தோல்வியால் டீம் இந்தியாவிற்கு வாய்ப்பு அதிகரிப்பு

அபிஷேக் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அரைசதங்கள், அர்ஷ்தீப் சிங்கின் அபாரமான பந்துவீச்சு ஆகியவற்றால், ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பில் இந்திய அணி நீடிக்கிறது. சென்னையில் நடந்த இந்த வாழ்வா-சாவா போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், சூப்பர் 8 சுற்றில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸைப் போலவே தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றுள்ளது. இதனால், மார்ச் 1 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் மோதல், இரண்டாவது அரையிறுதி இடத்திற்கான ஒரு நாக் அவுட் போட்டியாக மாறியுள்ளது.

23
மழை பெய்வதற்கான சூழல் இல்லை
Image Credit : Getty

மழை பெய்வதற்கான சூழல் இல்லை

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அப்படி வெற்றி பெற்றால் நெட் ரன் ரேட் பார்க்க தேவை இருக்காது. அப்படியில்லை என்றால் என்னாகும் என்பது பற்றி பார்க்கலாம். கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அப்படியே வெளியேறும் சூழல் ஏற்படும். ஆனால், மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி மழை பெய்வதற்கான சூழல் இல்லை. ஆதலால் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும்.

33
நெட் ரன் ரேட்
Image Credit : Getty

நெட் ரன் ரேட்

இந்தியா தனது பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான கணித ரீதியிலான வாய்ப்பு இன்னும் மிச்சமுள்ளது. ஆனால், அது பல்வேறு முடிவுகளைப் பொறுத்தே அமையும். அந்தச் சிக்கலான வழிமுறை இதோ:

இந்தியா தனது அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணியை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவை ஜிம்பாப்வே வீழ்த்த வேண்டும். இந்த இரண்டும் நடந்தால் இந்தியாவிற்கு மொத்தமாக 4 புள்ளிகள் கிடைக்கும். ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில், அப்போது நெட் ரன் ரேட் விகிதத்தில் இறுதிப் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்படும். ஒருவேளை இந்திய அணி அதிக நெட் ரன் ரேட் பெற்றிருந்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இது சாத்தியம்தான் என்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்து இருப்பதால், முதலிடத்தைப் பிடிப்பது இந்தியாவுக்கு அத்தனை எளிதான காரியம் அல்ல.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?
Recommended image2
ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!
Recommended image3
கோல்டன் சான்ஸை வீணாக்கிய சஞ்சு சாம்சன்.. பார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா.. அதிரடியில் கலக்கல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved