- Home
- Sports
- Sports Cricket
- ஜெயிலில் கம்பி எண்ணிய டாப் 10 கிரிக்கெட் வீரர்கள்! லிஸ்ட்டில் 2 இந்தியர்கள்! பாகிஸ்தானியர்கள் அதிகம்!
ஜெயிலில் கம்பி எண்ணிய டாப் 10 கிரிக்கெட் வீரர்கள்! லிஸ்ட்டில் 2 இந்தியர்கள்! பாகிஸ்தானியர்கள் அதிகம்!
Cricket Players in Jail: விதிகளை மீறி, நன்னடத்தையை மீறி குற்றச்செயல்கள் மூலம் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் சிறை சென்றுள்ளனர். அப்படி ஜெயிலில் கம்பி எண்ணிய வீரர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

சிறைக்கு சென்ற கிரிக்கெட் வீரர்கள்
விளையாட்டில் ஒழுக்கமும், விளையாட்டு உணர்வும் மிக முக்கியம். ஆனால், பலமுறை கிரிக்கெட் வீரர்கள் விதிமுறைகளை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றுள்ளனர். சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போதே கைதாகி சிறைக்குச் சென்றவர்கள் பலர். ஜெயிலில் கம்மி எண்ணிய சர்வதேச கிரிகெட் வீரர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இம்ரான்கான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் மற்றும் அரசியல் சார்ந்த பல்வேறு குற்றச்சாட்டுகளின் காரணமாக சிறை சென்றார். இன்னும் அவர் ஜெயிலில் தான் இருக்கிறார்.
முகமது அமீர்
சிறைக்குச் சென்ற கிரிக்கெட் வீரர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் உள்ளனர். அவர்களில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் கைதானார். 2010-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஃபிக்ஸிங் செய்ததாக பிரிட்டிஷ் போலீஸார் இவரைக் கைது செய்தனர். சிறைக்குச் சென்ற அமீர், பின்னர் தன் தவறை ஒப்புக்கொண்டு, தண்டனைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பினார்.
நவ்ஜோத் சிங் சித்து
சிறைத்தண்டனை அனுபவித்த இந்திய வீரர்களில் நவ்ஜோத் சிங் சித்துவும் ஒருவர். 1988-ல் நடந்த சாலைத் தகராறு வழக்கில், ஒரு முதியவரைத் தாக்கியதற்காக சித்து 2022-ல் சிறைத்தண்டனை பெற்றார்.
ஸ்ரீசாந்திற்கு வில்லனான ஃபிக்ஸிங்
2013 ஐபிஎல் தொடரில் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சிறை சென்றார். சிறைக்குச் சென்ற அவரால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப முடியவில்லை. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், ஸ்ரீசாந்த் நீண்ட நாட்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது.
சல்மான் பட்
2010 இங்கிலாந்து சுற்றுப்பயணம் பல பாகிஸ்தான் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது. அப்போதைய கேப்டன் சல்மான் பட், ஸ்பாட் ஃபிக்ஸிங்கின் சூத்திரதாரியாக இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஃபிக்ஸிங் செய்ததற்காக சல்மான் பட்டும் சிறை சென்றார். இந்த வழக்கில்தான் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃபும் சிறை சென்றார்.
சிறை தண்டனை அனுபவித்த மற்ற ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள்
தனுஷ்க குணதிலகா
இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு பெண் அளித்த புகாரில் கைதானார்.
குசல் மெண்டிஸ், பென் ஸ்டோக்ஸ்
2020-ல், மற்றொரு இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் விபத்து வழக்கில் கைதானார். 2017-ல், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு தெருச் சண்டையில் கைதாகி சிறை சென்றார்.

