MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • கிரிக்கெட் வீரர்கள் சிலர் நிர்வாண படங்கள் அனுப்பினர்! சஞ்சய் பங்கர் மகள் பகீர் குற்றச்சாட்டு!

கிரிக்கெட் வீரர்கள் சிலர் நிர்வாண படங்கள் அனுப்பினர்! சஞ்சய் பங்கர் மகள் பகீர் குற்றச்சாட்டு!

கிரிக்கெட் வீரர்கள் சிலர் நிர்வாண படங்கள் அனுப்பியதாக அனன்யா பங்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 19 2025, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Anaya Bangar accused cricketers of sending her nude pictures: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர். இவரது மகன் 23 வயதான ஆர்யன் பங்கர். தந்தையை போன்று கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட இவர் உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் இஸ்லாம் ஜிம்கானாவுக்காக விளையாடியுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான  ஆர்யன் பங்கர் லீசெஸ்டர்ஷையரில் உள்ள ஹின்க்லி கிரிக்கெட் கிளப்பிற்காகவும் விளையாடி இருக்கிறார். இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்யன் பங்கர் தான் பெண்ணாக மாற வேண்டி விருப்பம் தெரிவித்து பாலின மாற்றச் சிகிச்சை மேற்கொள்வதாக அறிவித்து இருந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Anaya Bangar, Cricket

Anaya Bangar, Cricket

இதனைத் தொடர்ந்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் தனது பெயரை அனன்யா பங்கர் என மாற்றிக் கொண்டார். இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் செய்தி வெளியிட்ட அவர், ''சிறு வயது முதலே தந்தையின் வழியை பின்பறி அவரை போன்று பெரிய வீரராக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தந்தையை போன்று நாட்டுக்காக விளையாட வேண்டும் என திறமையை வளர்த்துக் கொண்டேன். ஆனால் நான் ஹார்மோன் மாற்று சிகிச்சை செய்து கொண்டபிறகு எனது தசை வலிமை, நினைவாற்றல், விளையாடும் திறன் குறைந்து விட்டது'' என்று கூறியிருந்தார்.

கேஎல் ராகுலின் மகளுக்கு என்ன பெயர் தெரியுமா? அர்த்தம் என்ன?

34
Anaya Bangar, Indian Cricket Team

Anaya Bangar, Indian Cricket Team

இந்நிலையில், சில கிரிக்கெட் வீரர்கள் தனக்கு நிர்வாண படங்கள் அனுப்பியதாக அனன்யா பங்கர் பகீர் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். தி லாலன்டாப் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பினர் என்று கூறியதுடன் ஒரு நபர் எல்லோர் முன்னிலையிலும் தன்னைத் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டினார். "அப்போது அதே நபர் என் அருகில் வந்து அமர்ந்து என் புகைப்படங்களைக் கேட்பார்" என்றும் அனன்யா பங்கர் தெரிவித்துள்ளார். 

பெரிய போட்டிகளில் விளையாடியவர்கள் கூட தனக்கு நிர்வாண புகைப்படங்கள் அனுப்பியதாக கூறியுள்ள அனன்யா பங்கர், அவர்களின் ஆசைக்கு நான் உடன்படுவேன் என எதிர்பார்த்தனர். நான் என்னை ‍பாதுகாத்துக் கொள்ள விரும்பினேன் என்று கூறியுள்ளார். அதே வேளையில் தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய வீரர்கள் யார்? என்பதை அனன்யா பங்கர் கூற மறுத்து விட்டார்.

44
Anaya Bangar, India

Anaya Bangar, India

''அப்பா ஒரு பிரபலமான நபர் என்பதால் நான் என்னைப் பற்றி ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருந்தது. கிரிக்கெட் உலகம் பாதுகாப்பின்மை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையால் நிரம்பியுள்ளது. எனது அடையாளத்திற்காக நான் மனரீதியான சித்ரவதையை மட்டுமல்ல, பாலியல் துன்புறுத்தலையும் எதிர்கொண்டேன்'' என்ற பகீர் தகவலையும் அனன்யா பங்கர் கூறியுள்ளார். திருநங்கை விளையாட்டு வீரர்கள் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தடை விதிக்கும் ஐ.சி.சியின் புதிய விதி குறித்தும் அனயா பங்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

அனன்யா பங்கரின் இந்த பகீர் குற்றச்சாட்டுகள் இப்போது கிரிக்கெட் உலகில் பேசும்பொருளாகியுள்ளது. ''அனன்யா பங்கர் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளானது உண்மையா? இது உண்மையெனும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என கிரிக்கெட் ரசிகரக்ள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

8 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு தந்தையான ஜாகீர் கான்! க்யூட் போட்டோஸ் வைரல்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
FIFA : கோல் மழை பொழிந்த ஸ்பெயின்... சவுதிக்கு எதிராக அபார வெற்றி
Recommended image2
Virat Kohli: 'கம்மி விலைக்கு ஷூ தர்றேன், ஆனா...': டெஸ்ட் கம்பேக் வதந்திக்கு கோலி முற்றுப்புள்ளி
Recommended image3
T20 World Cup: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி... கோட்டைவிட்ட 5 முக்கிய தவறுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved