கேஎல் ராகுலின் மகளுக்கு என்ன பெயர் தெரியுமா? அர்த்தம் என்ன?
KL Rahul Daughter Name Evaarah : ஐபிஎல் 2025இல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகளின் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கே.எல். ராகுல் மகளின் பெயர் வெளியீடு:
KL Rahul Daughter Name Evaarah : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் சமீபத்தில் தந்தையானார். கடந்த மார்ச் 24 அன்று அவரது மனைவி அதியா ஷெட்டி பெண் குழந்தை பிறந்தது. இதனை இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்குத் தெரிவித்தனர்.
தனது மகளின் பிறந்தநாளன்று ராகுல் ஐபிஎல் 2025 இன் முதல் போட்டியையும் தவிர்த்தார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் முதல் போட்டிக்கு முந்தைய நாள் இரவு அவருக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்ததால், தனது மனைவியைக் கவனித்துக் கொள்ள மும்பைக்குச் சென்றார். இந்நிலையில் தம்பதியினர் தங்கள் மகளின் பெயரை அறிவித்துள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் கே.எல். ராகுல் தற்போது ஐபிஎல் 2025 இல் அணியுடன் இணைந்து அடுத்த போட்டிக்கான பயிற்சியில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில், தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தனது மகளின் பெயரையும் பகிர்ந்துள்ளார். ஒரு புகைப்படத்தில், "எங்கள் மகள், எல்லாமே எவாரா (Evaarah) - கடவுளின் ஆசி" என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். எவாரா (Evaarah) என்றால் கடவுளின் பரிசு என்று பொருள்.
1 ½ ஆண்டுகளுக்குப் பின் தந்தையான கே.எல். ராகுல்
2023 ஆம் ஆண்டில், கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்னதாக இருவரும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் காதலித்துள்ளனர். அதன் பிறகு தான் பெற்றோர்கள் சம்மதப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
அதியாவின் தந்தை சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். பின்னர் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். இப்போது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பெற்றோராகிவிட்டனர்.
ஐபிஎல் 2025 சிறப்பாக விளையாடி வரும் கே.எல். ராகுல்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ராகுலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் விளையாடவில்லை என்றாலும், தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். இதுவரை ஐந்து போட்டிகளில் 59.50 என்ற சிறப்பான சராசரியுடன் 238 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிராக 93 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 154.54 ஆக உள்ளது. அவரது சிறப்பான ஆட்டத்தைக் கருத்தில் கொண்டு, டெல்லி இந்த முறை சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுலைத் தவிர மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.