மும்பை மற்றும் பெங்களூரு தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வாய்ப்பு!

கடைசி லீக் போட்டிகளில் மும்பை மற்றும் பெங்களுரு அணிகள் தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

If Mumbai Indians and Royal Challengers Bangalore Loss their Final Match then, RR will be getting Play off chances?

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் எப்படியாவது பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட வேண்டும் என்று போராடி வருகின்றன. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிட்டது. அதே போன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.

ஜெர்சி நம்பரும் 18, சதம் அடித்த நாளும் 18; மே 18, 2016 – கையில் 8 தையல் போட்டு சதம் அடித்த விராட் கோலி!

இதையடுத்து, ஆர்சிபி, சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்புக்காக போராடி வருகின்றன. இதில், எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அய்யோ போச்சே: விராட் கோலி சதம் அடித்ததைக் கண்டு மோசமாக ரியாக்‌ஷன் கொடுத்த காவ்யா மாறன்!

ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 14 புள்ளிகளுடன் 4 மற்றும் 5ஆவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 6, 7 மற்றும் 8ஆவது இடங்களிலும் உள்ளன.

டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் 2ஆவது அணியாக சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். எனினும், இந்தப் போட்டியில் சென்னை தோற்றால் 15 புள்ளிகளுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

சிஎஸ்கே தோற்று, கடைசி போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் 2ஆவது அணியாக ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

ஐபிஎல்லில் கிங் என்றால் அது கோலி தான்: விராட் படைத்த சாதனை துளிகள்!

கேகேஆர் அணிக்கு எதிராக கடைசி போட்டியில் லக்னோ வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு 17 புள்ளிகளுடன் தகுதி பெறும். அதுவும், சிஎஸ்கே தோற்றால் 2ஆவது இடம் பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும்.

லக்னோ வெற்றி பெற்று, சிஎஸ்கேயும் வெற்றி பெற்றால் 2 அணிகளும் 2 மற்றும் 3ஆவது இடங்கள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

லக்னோ தோற்று, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி பெற்றால், மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உண்டு.

லக்னோ தோற்று, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

5 முறை சாம்பியன்: மும்பைக்கே ஆப்பு வைக்கும் ஆர்சிபி!

பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு மற்ற அணிகளைப் பொறுத்து அமையும். அதோடு, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் கடைசி போட்டிகளில் தோல்வி அடைந்தால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios