WTC Final - 3 பேட்ஜாக லண்டன் புறப்படும் டீம் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு பேட்ஜாக லண்டன் புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎல் ராகுல், கேஎஸ்ல் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனத்கட்.
சென்னைக்கு எதிராக ஜெர்சியை மாற்றி விளையாடும் டெல்லி: ரெயின்போ ஜெர்சி ராசி!
இதில், கேஎல் ராகுல், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். ஏற்கனவே கேஎல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் அறிவிக்கப்பட்டார்.
மும்பை மற்றும் பெங்களூரு தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வாய்ப்பு!
இந்த நிலையில், தற்போது இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
இந்த நிலையில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் 3 பேட்ஜ்களாக லண்டன் புறப்பட்டுச் செல்ல இருக்கின்றனர். இதில் முதல் பேட்ஜ்ஜில் இடம் பெற்றுள்ள வீரர்கள் வரும் 23 ஆம் தேதி லண்டன் செல்கின்றனர். இரண்டாவது பேட்ஜில் உள்ள வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் முடிந்த பிறகு லண்டன் புறப்பட்டுச் செல்கின்றனர். இறுதியாக, 3ஆவது பேட்ஜில் உள்ள வீரர்கள் வரும் 30 ஆம் தேதி செல்கின்றனர். வரும் 7ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பயிற்சி போட்டி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.