Ravindra Jadeja Statue Pictures: சிலையோடு சிலையாக போஸ் கொடுத்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் புகைப்படம்!
லண்டன் சென்றுள்ள ரவீந்திர ஜடேஜா அங்கு சிலையோடு சிலையாக அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. இதுவரையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 268 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டிகளில் 191 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 510 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
WI vs IND 5 T20 Matches: வரலாற்றில் முதல் முறை: 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்த இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணியில் இடம் பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடினார். இதில், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார். 2ஆவது போட்டியில் 2 விக்கெட் கைப்பற்றினார்.
முதல் ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட்டு மட்டும் கைப்பற்றினார். மற்ற 2 போட்டிகளில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதையடுத்து டி20 தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் ஆசிய கோப்பை தொடர் ஆரம்பமாகிறது.
வேஷ்டி குர்தாவில் சென்று குடும்பத்தோடு ஏழுமலையானை தரிசனம் செய்த ரோகித் சர்மா!
இதற்காக இந்திய அணி வரும் 23 ஆம் தேதி பெங்களூருவில் ஒன்றாக கூடுகின்றனர். இதில், ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ஓய்வில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா தனது ஓய்வு நேரத்தை லண்டனில் செலவிட்டு வருகிறார். அங்கு, சிலையோடு சிலையாக அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, பல இடங்களுக்கு சென்று ஷாப்பிங் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்தியா ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.