WI vs IND T20 Series: வெஸ்ட் இண்டீஸ் டூர் உணர்த்திய பாடம் என்ன தெரியுமா? சாம்சனுக்கு இரக்கம் காட்டியது போதும்!

ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், சஞ்சு சாம்சன் இந்திய அணியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

We learn some lessons from India tour of West Indies 2023 due to Sanju Samson and Hardik Pandya

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அங்கு, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி 2-1 என்று ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.

வேஷ்டி குர்தாவில் சென்று குடும்பத்தோடு ஏழுமலையானை தரிசனம் செய்த ரோகித் சர்மா!

இதையடுத்து ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், தொடர்ந்து 2 டி20 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதன் பிறகு நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தது. இந்த நிலையில், தான் தொடரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

WI vs IND: தப்பு மேல தப்பு பண்ணிய ஹர்திக் பாண்டியா – 13 சீரிஸ்களில் முதல் முறையாக டி20 தொடரை இழந்த இந்தியா!

இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இது ஹர்திக் பாண்டியா செய்த முதல் தவறு. அவர், பவுலிங் தேர்வு செய்திருக்க வேண்டும். எனினும் முதலில் விளையாடி 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே 61 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

 

 

 

 

பின்னர் எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. கடைசி ஓவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் வீசினார். இந்த ஓவரில் மட்டுமே 11 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கடைசி போட்டியில் தோற்ற இந்தியா: 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

இந்த டி20 தொடரின் மூலமாக மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் டூர் மூலமாக நமக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்னவென்றால்,

சுப்மன் கில் பிளாட் பிட்சில் இளவரசர் என்றும், மற்றொரு பிட்சில் அவர் ஒரு இளவரசி என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியிலிருந்து விலகி சக வீரராக மட்டுமே விளையாட வேண்டும்.

 

இதுவரையில் சஞ்சு சாம்சனுக்காக இரக்கம் காட்டியது போது. அவரை இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும்.

இஷான் கிஷான் + ஹர்திக் பாண்டியா + சுப்மன் கில் + சஞ்சு சாம்சன் ஆகியோர் இணைந்து டி20 போட்டிகளில் 172 இன்னிங்ஸில் 21 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளனர்.

ஆனால், கேஎல் ராகுல் 68 இன்னிங்ஸில் 22 அரைசதங்கள் அடித்துள்ளார்.

WI vs IND 5th T20: விட்டு விட்டு மழை; ஆறுதல் அளித்த சூர்யகுமார் யாதவ் – 165 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட இது சரியான நேரம் இல்லை. அவர், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் பாஷ் உள்நாட்டு போட்டிகளில் விளையாட செல்ல வேண்டிய நேரம் என்று டுவிட்டரில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர்களில் சஞ்சு சாம்சனின் ஆவரேஜ் ஸ்டிரைக் ரேட் 10, 114 மட்டுமே. ஆனால், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கின் பேட்டிங் ஆவரேஜ் 13 மற்றும் ஸ்டிரைக் ரேட் 185 ஆகும். இதுவரையில் சஞ்சு சாம்சன் விளையாடிய டி20 போட்டிகளில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 39 ரன்கள் மட்டுமே.

வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ளார்.

WI vs IND 5th Test: இந்தியா பேட்டிங்: ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios