WI vs IND: தப்பு மேல தப்பு பண்ணிய ஹர்திக் பாண்டியா – 13 சீரிஸ்களில் முதல் முறையாக டி20 தொடரை இழந்த இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததோடு கடைசியாக நடந்த 13 டி20 தொடர்களில் முதல் முறையாக இந்த டி20 தொடரை இழந்துள்ளது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் 1-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, பிறகு 2-1 என்று ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது.
WI vs IND 5th T20: சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் கைப்பற்றிய திலக் வர்மா!
இதில், இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என்று சமனில் இருந்தன. இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்து முதல் தவறு செய்துவிட்டார். 4ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் ஆடி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், மிடில் ஆர்டரில் இந்திய அணி ரன்கள் குவிக்க தவறிவிட்டது. தொடர்ந்து அடித்து ஆட முயற்சித்து ஆட்டமிழந்து வெளியேறினர். இக்கட்டான சூழலில் அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணிக்கு திரும்பிவிட்டால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் தான்.
கடைசியாக இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4ஆவது டி20 போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழந்து 178 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று தான் 4ஆவது டி20 போட்டியிலும் இந்திய அணி 17 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
WI vs IND 5th Test: இந்தியா பேட்டிங்: ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இதையெல்லாம் யோசிக்காத ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்து கோட்டைவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி முதல் ஓவரையும் அவர் தான் வீசினார். அந்த ஓவரில் மட்டும், ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று 11 ரன்கள் கொடுத்தார். 3 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 4 ஓவர்கள் வீசி 51 ரன்கள் அள்ளி கொடுத்துள்ளார். குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவர் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
WI vs IND 5th T20 Match: டி20 தொடர் யாருக்கு? இந்தியாவா? வெஸ்ட் இண்டீஸா?
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மட்டுமே நேற்றைய போட்டில் பந்து வீசவில்லை. மற்றபடி அனைவரும் பந்து வீசிவிட்டனர். ஹர்திக் பாண்டியா முதல் ஓவரை வீசுவதற்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அல்லது முகேஷ் குமாரை பந்து வீச தேர்வு செய்திருக்கலாம். இப்படி தொடர்ந்து தப்பு மேல தப்பு பண்ணி, இந்திய அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க காரணமாக அமைந்துவிட்டார்.