WI vs IND 5th T20: சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் கைப்பற்றிய திலக் வர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பந்து வீசிய திலக் வர்மா தனது முதல் சர்வதேச விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி, இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் அடித்து ஆட முயற்சித்து 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
அடுத்து சுப்மன் கில்லும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டிற்கு 49 ரன்கள் சேர்த்தனர். திலக் வர்மா 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து வந்த சஞ்சு சாம்சன் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் தவறவிட்டு வருகிறார். கடந்த போட்டியில் களமிறங்காத சாம்சன், இந்தப் போட்டியில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 14 ரன்களில் வெளியேறினார். அக்ஷர் படேல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அர்ஷ்தீப் சிங் சிக்ஸர் அடித்த நிலையில், அடுத்த பந்தில் கிளீன் போல்டானார். குல்தீப் யாதவ் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். கடைசியாக அக்ஷர் படேல் 13 ரன்களில் ஆட்டமிழக்க, முகேஷ் குமார் பவுண்டரி அடித்ததன் மூலமாக இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 35 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் பிராண்டன் கிங் கடைசி வரை அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டர்கள் உள்பட 85 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாய் ஹோப் 22 ரன்கள் சேர்த்தார். இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
WI vs IND 5th Test: இந்தியா பேட்டிங்: ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?
மேலும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் சஞ்சு சாம்சன், சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே பந்துவீசவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோர் பந்து வீசினர். இதில், திலக் வர்மா தனது முதல் சர்வதேச போட்டி விக்கெட்டை கைப்பற்றினார். அதுவும் அதிரடி வீரரான வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை எடுத்தார். எனினும், 2 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் உள்பட 17 ரன்கள் கொடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ஓவர் வீசி 11 ரன்கள் கொடுத்தார்.
WI vs IND 5th T20 Match: டி20 தொடர் யாருக்கு? இந்தியாவா? வெஸ்ட் இண்டீஸா?