வேஷ்டி குர்தாவில் சென்று குடும்பத்தோடு ஏழுமலையானை தரிசனம் செய்த ரோகித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1987 ஆம் ஆண்டு 30ஆம் தேதி ஏப்ரல் மாதம் பிறந்தவர் ரோகித் சர்மா. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் 244 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா அதிகபட்சமாக 264 ரன்கள் குவித்துள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று முதலில் கைப்பற்றியது.
அதன் பிறகு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 போட்டிகள் கொண்டர் தொடருக்கு ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்து சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனினும், காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெறுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பைத் தொடரைத் தொடர்ந்து இந்தியாவில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் 2023 நடக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பை தொடரை கைப்பற்றவே இல்லை.
இந்த நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் அடுத்தடுத்து நடக்க உள்ள ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. எப்படியும், இந்த தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ரோகித் சர்மா தனது குடும்பத்தோடு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அதுவும், வேஷ்டி குர்தாவில் சென்ற ரோகித் சர்மா வெங்கடேஷ்வர பெருமாளை தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
WI vs IND 5th Test: இந்தியா பேட்டிங்: ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?