இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. 

தொடர் 1-1 என சமனடைந்துள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கிறது. மதியம் ஒன்றரை மணிக்கு போட்டி தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஆடுகளமும், முதல் 2 போட்டிகள் நடந்த ஆடுகளத்தை போல பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். எனவே முதலில் பேட்டிங் ஆடும் அணி பெரிய ஸ்கோர் அடித்தாக வேண்டும். 

Also Read - நீங்க பயப்படாதீங்க.. நாங்க என்ன செய்றோம்னு எங்களுக்கு நல்லா தெரியும்.. கேப்டன் கோலியின் மெசேஜ்

இந்நிலையில், தொடரை தீர்மானிக்கும் முக்கியமான இந்த கடைசி போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். இரண்டாவது போட்டியில் ஆடிய அதே அணி தான் இந்த போட்டியிலும் ஆடும். அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்பட வாய்ப்பில்லை, தேவையுமில்லை. 

ரிஷப் பண்ட் சிகிச்சையில் இருப்பதால், இந்த போட்டியிலும் கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார். அவர் பேட்டிங்கிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய மனீஷ் பாண்டே தான் இந்த போட்டியிலும் ஆடுவார். அதேபோல ஸ்பின் பவுலிங் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

Also Read - வார்னரின் கேட்ச்சை அலட்டிக்கொள்ளாமல் ஒற்றை கையில் அசால்ட்டா பிடித்த மனீஷ் பாண்டே.. வீடியோ

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, நவ்தீப் சைனி, பும்ரா. 

ஆஸ்திரேலிய அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. அந்த அணியும் முதலிரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணியுடன் தான் களமிறங்கும். 

ஆஸ்திரேலிய அணி:

வார்னர், ஃபின்ச்(கேப்டன்), ஸ்மித், லபுஷேன், அஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகர், கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா.